நடிகர் சங்கம் தேர்தல் கட்டத்தில் சிம்பு தரப்பு, விஷால் தரப்பு என்று அணிகள், பிரச்னைகள் எழுந்தது. விஷால் உள்ளிட்ட எதிர் அணியை சேர்ந்தவர்களை ஒருமையில் வசை பாடினார் வம்புத் தம்பி சிம்பு. தேர்தலில் விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தனர்.

வந்த விஷால் அணியினர், நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக நடிகர் சங்கத்தின் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஏப்., 17ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தினர். இதில் அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பங்கேற்கவில்லை. நடிகர் சிம்பு தற்போது முன்னணி ஹீரோவாக இல்லையென்றாலும் பங்கேற்கவில்லை. அதற்கு ஆடியன்ஸ் தரப்பிலும் பெரிய வசூல் கிடைக்கவில்லை. எல்லோரும் டி.வியில் பார்த்துக் கொள்ளலாம் என்றே இருந்துவிட்டார்கள்.

தற்போது திடீரென்று நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சிம்பு பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது…

“பல்வேறு பிரச்னைகள் காரணமாக நடிகர் சங்கத்தை விட்டு நான்ws விலகுகிறேன். சங்கம் என்றால், ஒரு நடிகருக்கு ஏதாவது பிரச்னை என்றால் உதவ வேண்டும். ஆனால் நான் சிக்கல்களை சந்தித்தபோது நடிகர் சங்கம் எனக்கு எந்த ஒரு ஆதரவும் தரவில்லை, உதவவும் இல்லை. ஜோக்கர்களாக நடிகர்கள் சமீபத்தில் நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட்டும் என்னை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அந்த கிரிக்கெட் போட்டியில் பெரும்பாலான நடிகர்கள் ஜோக்கர்களாக தெரிந்தனர்” என்று கூறியுள்ளார்.

Related Images: