சென்றவாரம் நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தி வரும் காசில் நடிகர் சங்கம் சங்கக் கட்டிடம் கட்டலாம் என்கிற ஐடியாவிற்கு அஜித் உட்பட்ட பெரிய நடிகர்கள் சிலர் சரியான ரெஸ்பான்ஸ் தராததையடுத்து நடிகர் சங்கம் சார்பில் அவர்களை மறைமுகமாகக் குற்றம் சாட்டி நட்சத்திரக் கிரிக்கெட்டை விளக்கி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதற்கு அஜித்திடமிருந்து வழக்கம்போல நோ ரியாக்ஷன். ஆனால் அவர் சார்பில் யாரோ குரல் கொடுத்திருப்பது போல ‘வாட்ஸப்பில்’ வந்திருக்கிறது பின் வரும் குரல்.
“நடிகர் சங்கம் நடத்தும் கிரிக்கெட் போட்டியை அஜித் அவர்கள் புறக்கணிக்கின்றார் என்பது தெரிந்ததே. காரணம் இதற்கு மக்களிடையே பணம் வசூலிக்க வேண்டாம் என்ற அவரது நல்மனது என்பதும் தெரிந்ததே ..
தற்போது சில உத்தமவாதிகள் ‘அப்போது அஜித் தை சம்பளம் வாங்காமல் நடிக்க சொல்டா; படத்தை ஓசில ஓட்ட சொல்லுடா..’ என்று அஜித் க்கு எதிராக கூறி வருகிறார்கள் .
அந்த உத்தமவாதிகளுக்கு பதில் இதோ ..
நடிப்பு அவர் தொழில் .. தொழிலுக்கு ச் சம்பளம் வாங்காமல் நீ ஒரு நாள் வேலை செய்வாயா ? .
அவர் சொன்னது உன் சம்பளத்தை பிடுங்க மனமில்லாமல் தான் ..
படத்தை இலவசமாக ஓட்டனுமா..?
அஜித் ஒன்றும் தியேட்டர் வாசலில் நின்று டிக்கெட்டை கூவி கூவி விற்கவில்லை .. விற்பது நாம் தான் காரணம் நம் வருமானத்துக்குத்தான் …
படத்தை கோடி கணக்கில் பணம் போட்டு வாங்கிய தியேட்டர் காரன் உனக்கு ஓசிலையா ஓட்டுவான் ?? அவனும் மக்களில் ஒருவன் தான் .
இது வரை எந்த தியேட்டர் காரனும் ‘உங்கள் படம் நஷ்டம் ஆகிவிட்டது நஷ்ட ஈடு கொடுங்க’ என்று அஜித்திடம் வந்து கேட்டதில்லை ..
உனக்கு காசு கொடுத்து படம் பார்க்க பிடிக்கலையா அப்போது மூடிட்டு வீட்டுலயே இரு..
கோடி கோடியாக பணம் புரளும் ஒரே துறை சினிமா. இதில் இருக்கும் நடிகர்கள் ஏன் தினம் சம்பாதிக்கும் மக்களிடையே பணம் பறிக்க வேண்டும் ? அந்த கட்டிடத்தை நாமே கட்டலாம் என்று தான் அஜித் நட்சத்திரக் கிரிக்கெட்டை புறக்கணிக்கின்றார்.
இனிமேலும் அஜித் தை விமர்சிக்காமல் இந்த விஷயத்தில் ஆதரவு தாருங்கள்.
நமக்காக தான் அவர் நடிகர் சங்கத்தையே எதிர்த்து உள்ளார் அவர் பொண்டாட்டி புள்ளைக்காக இல்லை ..
நாமே அவர் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டால் அவருக்கு ஆதரவு யார் கொடுப்பார் ?
நீங்கள் யார் ரசிகரா வேண்டுமானாலும் இருங்க ரஜினி, கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என்று யார் ரசிகராக இருந்தாலும், மக்கள் என்ற காரணத்தால் அஜித்தின் நேர்மையான குரலுக்கு ஆதரவு கொடுங்கள். “ – இவ்வாறு அந்த வாட்ஸ் அப் மெசெஜ் வலம் வருகிறது.
அஜீத் சினிமாவில் அரசியல் வேண்டாமென நினைக்கிறார் என்றாலும் அதுவே ஒரு தவறான அரசியல் தான். தீய அரசியலுக்கு எதிராக நல்ல அரசியலைச் செய்வது தானே சரியாக இருக்கும் ?
அஜீத்தின் ‘எதற்கும் நோ ரியாக்ஷன்’ மென்ட்டாலிட்டியை அவரது மெச்சூரிட்டி என்று நாம் எடுத்துக் கொள்ளலாமா ? அப்துல் கலாம் செத்ததுக்கும் அவர் இதே ரியாக்ஷன் தான் கொடுத்தார். சென்னை வெள்ளத்துக்கும், நடிகர் சங்க தேர்தலுக்கும் அதே ரியாக்ஷன் தான். தான் நடிகன், ஒரு பிஸினெஸ் மேன் என்று நினைக்கும் அவர், ஒரு பிரபலமான ஆளாக மாறும்போது அவருக்கும் சில அடிப்படையான சமூகக் கடமைகள் இருக்கின்றன என்பதை புரிந்துகொள்ளாமல், ‘என் இஷ்டம், என் வாழ்க்கை. மூடிட்டு கிளம்பு ‘என்கிற ரீதியிலேயே பல செயல்பாடுகளில் தெரிகிறார்.
அஜீத் சார் ! நாலு பேரு நம்மை எடுத்துக் காட்டா நினைச்சிக்கிற மாதிரி வாழ்ந்து காட்டுறது ஒன்னும் தப்பில்லை சார்..