நடிகர் சங்கம் எனக்கு ஒன்னுமே செய்யலை. நான் பீப் பாடலைப் பாடியும் அதை வெளியிடாமல் வைத்திருந்த ரகசியத்தை யாரோ தெரிந்து அந்தப் பாடலை வெளியிட்டதைசெ சொல்லியும் சங்கம் என்னைக் கண்டுக்கவே இல்லை. அதனால் விலகப் போகிறேன் என்று அதிரடி அறிக்கை விட்டிருந்தார் சிம்புத் தம்பி.
என்னடா இது வம்பாகிவிட்டது. இவன் முடியை வெட்டுடான்னா மொட்டையடிச்சுட்டு வந்து நிப்பான் போல இருக்கேன்னு பயந்து போன டி.ராஜேந்தர் சிம்புவுக்கு அறிவுரை சொல்வது போலவும், மற்றவர்களுக்கு சிம்புவின் நிலையை விளக்குவது போலவும் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.
.”நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாக என் மகன் அறிவித்த பிறகு விஷால், சிம்புவை மன்னிப்பு கேட்க சொன்னோம் அவர்தான் சட்டரீதியாக சந்தித்து கொள்கிறேன் என்று கூறிவிட்டார் என்று விஷால் கூறியிருக்கிறார். நாங்கள் அப்படிச் சொன்னது உண்மைதான். பீப் பாடலை சிம்பு வெளியிடவில்லை. யாரோ திருடி வெளியிட்டிருக்கிறார்கள். தப்பு செய்யாத சிம்பு எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுதான் அப்போதும் கேட்டோம், இப்போதும் கேட்கிறோம். நாங்கள் கோர்ட் வாசல் படி எறி இறங்கி அதை சமாளித்து வருகிறோம்.
இப்போது விஷால் மீண்டும் மன்னிப்பு விவகாரத்தை தேவையில்லாமல் கிளப்பி இருக்கிறார். என் மகனுக்காக மன்னிப்பு கேட்ட நாசர் போன்றவர்களும் அதே சங்கத்தில் தான் இருக்கிறார்கள்.எம்.ஜி.ஆர். எஸ்.எஸ்.ஆர், என்.எஸ்.கே, சிவாஜி போன்றவர்கள் வளர்த்த சங்கம் அதை விட்டு விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று என் மகனை கேட்டுக் கொள்கிறேன். அதற்கு மேல் அவரது தனிப்பட்ட கொள்கை, சுயமரியாதை இருக்கலாம் அதை நான் மதிக்கிறேன்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் மாநில அமைச்சருக்கு இணையான சிறுசேமிப்புதுறை துணை தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்திருக்கிறேன். ஆனால் காலம் என்னை பக்குவப்படுத்தியிருக்கிறது. அதனால் நான் ஒன்று சொல்கிறேன். வேகத்தை விட விவேகம் முக்கியம்”.
இவ்வாறு டி.ராஜேந்தர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.