விஜயகாந்த்துடன் ஏற்பட்ட வாய்க்கால் பிரச்சனையில், போன தேர்தலில் விஜயகாந்த்துக்கு எதிராக திமுக வடிவேலை ‘வட்டச் செயலாளர் வண்டுமுருகனாக’ இழுத்து, மேடையேறி கன்னாபின்னா என்று திட்டவைத்தார்கள். இந்த டெக்னிக் அவர்களுக்கே எதிராய் போய் முடிந்தது. தேர்தலிலும் அவுட்டானதும் வடிவேலை கண்டுகொள்ளவேயில்லை.
வடிவேலுவும் புடிச்சா புளியங்கொம்பு தான் பிடிப்பேன்; ரீ-என்ட்ரியில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு தெனாலிராமன், எலி ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களும் அவுட். ஹீரோ ஆசையில் விஜய்யின் தெறி உள்பட பல படங்களில் காமெடியனாக நடிக்க தேடிவந்த வாய்ப்புகளையும் திருப்பி அனுப்பினார் வடிவேலு. தயாரிப்பாளர்கள் வடிவேலுவின் மேல் முதலீடு செய்ய ரெடியாகவேயில்லை.
இனிமேலும் தன்னை ஹீரோவாக வைத்து படம் பண்ண தயாரிப்பாளர்கள் யாரும் வரமாட்டார்கள் என்பது உறுதியாகி விட்டதால், விஷால் நடிக்கும் புதிய படத்தில் காமெடியனாக கமிட்டாகி விட்டார் வடிவேலு. அது மட்டுமின்றி ஏற்கனவே தன்னை காமெடி ட்ராக்கில் நடிக்க கேட்டுக்கொண்டிருந்த மேலும் சில படங்களிலும் இப்போது ஒப்பந்தமாகி விட்டாராம் வடிவேலு. ஆக, வடிவேலுவின் கைவசம் தற்போது 5 படங்கள் உள்ளது.
வடிவேலுவுடன் காமெடி துணை நடிகர்ளாக நடித்தவர்களெல்லாம் வடிவேலைத் தேடி வர ஆரம்பிக்க அவர்களிடமெல்லாம் காமெடியனாக ரீ-என்ட்ரி கொடுக்கிறேன். அதனால் என் மார்க்கெட் சரியாகி மீண்டும் தேவைப்படும்போது உங்கள் ஒவ்வொருவருக்குமே வாய்ப்புத்தருவேன் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் வடிவேலு.
திமுகவிலிருந்து இம்முறை விஜயகாந்த்தைத் திட்டுவதற்கு ஆள் தேடி இமான் அண்ணாச்சியைப் பிடித்திருக்கிறார்கள். அவர்கள் அழைத்தவுடன் போய் திமுகவில் சேர்ந்து கொண்ட இமான் அண்ணாச்சி, ‘ஐயா வணக்கம் … யாரையும் அவனே இவனேன்னு திட்டுறதுக்கு என்னை கூப்பிடாதீங்க. நம்ம கட்சியோட கொள்கைகளை விலாவரியா எழுதிக் குடுங்க. நான் அதை விலாவரியா, காமெடியா போய் மக்கள் கிட்டே சொல்றேன்.’ என்று தெளிவாகக் கூறிவிட்டாராம்.
“திட்டித் தீக்காமல் பேசுறதுக்கு இவர் எதுக்கு ? ” என்றவர்கள் அதற்குப் பின் எந்த பிரச்சாரத்திலும் பேச அவரை இதுவரை கூப்பிடவேயில்லையாம்.