ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளி வந்து பெரும் கவர்ச்சிக் காட்சிகளுடன், மூன்றாம் தர வசனங்களுடன் ரசிகர்களை கதிகலங்க வைத்த ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ திரைப் படத்தை தொடர்ந்து, அந்தக் கூட்டணி மீண்டும் இணையப் போகிறது என்பது தான் தற்போதைய கதிகலங்கும் செய்தி.
இதுபற்றி இப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்டீபன் கூறியதாவது “முதலில் திட்டமிட்டபடி நாங்கள் இந்த மாதமே படப்பிடிப்புக்கு புறப்பட்டு இருக்க வேண்டும் , ஆனால் கதாநாயகன் ஜி வி பிரகாஷுக்கு முன்னரே இருந்த படங்களின் படப்பிடிப்பு முடிவடையாததால் எங்களால் படப்பிடிப்புக்கு செல்லமுடியவில்லை. திரை துறையை சார்ந்தவனாக என்னால் இதை புரிந்துக் கொள்ள முடிந்தது. தற்போது நாங்கள் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளோம். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை நாங்கள் அறிவோம்.அதை நிச்சயம் வழங்குவோம். தற்போது கதாநாயகி மற்றும் தலைப்பு தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது’ என்றார் ஸ்டீபன்.
“அஜித் இல்லைனா விஜய்”யை நீங்க ட்ரை பண்ணலாமே ஸார்.. படத் தலைப்பாக.