இங்கிலாந்தைச் சேர்ந்த எட்வர்ட் முய்பிரிட்ஜ் என்கிற புகைப்படக் கலைஞரே நகரும் பிம்பங்களுக்கான அடிப்படையான ஒளிப்பதிவு முறையைப் பற்றி முதலில் ஆராய்ந்தவர். அவருடைய பெயரில் முய்பிரிட்ஜ் திரைப்படப் பள்ளி சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சினிமா ஒளிப்பதிவை மையப்படுத்தி இந்தப் பள்ளியில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட இருக்கிறது.

மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பள்ளியைத் துவக்கி வைத்தார்கள். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர  ஜி.பி.கிருஷ்ணா இந்த ஒளிப்பதிவுப் பள்ளியை துவக்கி நடத்துகிறார்.