ஆள் ஸ்லிம்மாகி விட்டாலும் பெரிய ஹீரோ நடித்தாலும் எனக்கும் கதையில் வெயிட் இருக்க வேண்டும் என்று உறுதியார் இருக்கிறார் நயன்தாரா.

தற்போது அவர் நடித்து வரும் காஷ்மோரா, இருமுகன் ஆகிய இரு படங்களிலும் அவருக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களாம்.  விக்ரமுடன் அவர் நடிக்கும் இருமுகன் படத்தில் நயனுக்கு காஷ்மீர் பள்ளத் தாக்கில் ஒரு ஆக்சன் காட்சியும் உள்ளதாம்.

பள்ளத்தாக்குகளில் யூனிட் நபர்கள் செல்லவே பயப்படும் பாதாளத்துக்கும் அசராமல் கூலாக டூயட் மற்றும் ஆக்சன் காட்சிகளில் நடித்துக் கொடுக்கிறாராம் நயன்தாரா.

இதைப் பார்த்த விக்ரமும் பதிலுக்கு போட்டி போட்டுக்கொண்டு மலையில் ஏறி நின்று ரிஸ்க் எடுத்து நானும் நடிக்கிறேன் என்று  ஒற்றைக் காலில் நிற்கிறாராம்.

 

Related Images: