பரத் நடித்த ‘சேவல்’ படத்தில் தமிழுக்கு வந்தவர் பூனம் பாஜ்வா. அழகுச் சிலையான அவருக்கு சேவலில் துவங்கி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என்று எல்லாமே சுமார் படங்களாகவே சுமார் நடிகையாகி கீழிறங்கி கேரக்டர் ரோல்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அரண்மனை – 2 வில் அவர் கவர்ச்சிக்காகவே பயன்படுத்தப்பட்டார். தற்போது புதிதாக குண்டு குதிரை, போகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பூனம்பாஜ்வாவுக்கு மும்பையில் திருமணம் நடந்து விட்டதாகவும், அவர் அதை மறைத்து நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. கல்யாணம் ஆகிவிட்டது என்று கதைகட்டி விட்டால் இருக்கிற மார்க்கெட்டும் அவுட்டாகி விடும் என்று உடனடியாக அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளார் பூனம்பாஜ்வா.

“எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. சமீபத்தில் எனது தங்கைக்குத் தான், திருமணம் நடைபெற்றது. அதைதான் எனக்கு திருமணமாகி விட்டதாக மாற்றி விட்டார்கள். மேலும், எனக்கு திருமணம் நடக்கும்போது ரசிகர்களுக்கு அறிவித்து விட்டே செய்து கொள்வேன். திருமணத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதனால அப்ளிகேஷன் போட நினைக்கிறவங்க பதட்டப்படாதீங்க. இன்னும் நெறைய டைம் இருக்கு.

Related Images: