நெருப்புடா பாட்டு இணையத்தில் கபாலி பட டீஸர் வெளியானதிலிருந்து ஹை பிட்சில் பிரபலமாகிவருகிறது. ரஜினியின் முரட்டுத்தனமான ரோலுக்கு ஏற்ற மாதிரி இப்பாடல் இருக்கிறது. இப்பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜ் என்கிற கவிஞர். அவருக்கு இப்பாடல் வரிகளாலேயே பெரும் அங்கீகாரம் கிடைத்துவிட்டது.  இனி கபாலி படத்தைப் பற்றிய செய்திகள் நாளுக்கு ஒன்றாவது வராவிட்டால் படத்துக்கு ஹைப் கிடைக்காதில்லையா? இதோ ஒரு செய்தி.

கலை இயக்குனர் ராமலிங்கம் கபாலி படத்திற்காக தாய்லாந்தில் உள்ள இரண்டு தெருக்களை படமெடுத்து அதே போல சென்னையில் செட் அமைத்திருக்கிறார். அதேபோல், மலேசியாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றையும் அப்படியே சென்னையில் செட் போட்டிருக்கிறாராம்.

செட் என்று சொல்லமுடியாத அளவுக்கு தத்ரூபமாக இருக்கும் இந்த செட்டில்தான் ரஜினி அறிமுகமாகும் காட்சி படமாக்கப்பட்டது என்கிறார் ராமலிங்கம்..

இப்படத்தின்  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ரஜினிக்காக முதன் முதலில் இசையமைத்திருக்கிறார். இசையில் தனக்கென தனியான முத்திரை பதித்து வரும் இவர் இப்படத்தில் கானாபாலா, அருண்ராஜா, அனந்து ஆகியோரை முக்கியமான பாடல்கள் பாடச் செய்துள்ளார்.

டீஸர் முதல் பாடல்கள் வரை இயக்குனர்  பா.ரஞ்சித் ஓ.கே செய்திருக்கிறார். படத்தையும் அப்படியே ஓ.கே செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். படம் என்னவோ பாட்சா பார்ட் 2 போலவே தெரிகிறது ட்ரெய்லரைப் பார்த்தவரைக்கும்.

 

Related Images: