கமல் நடிக்க அவரது அஸிஸ்டெண்ட் ராஜீவ் குமார் இயக்கிவந்த சபாஷ் நாயுடு அமெரிக்காவில் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே இயக்குனர் ராஜீவ் குமார் ஆஸ்பத்திரியில் சேர்ந்துவிட்டார்.
அமெரிக்காவில் அவருக்கு ‘லைம்’ வைரஸ் எனப்படும் அமெரிக்க மக்களைத் தாக்கும் அரிதான வைரஸ் நோய் தாக்கியிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதிலிருந்து அவர் குணமடைய சில மாதங்களாவது ஆகும் என்பதால் படப்பிடிப்பைத் தொடரமுடியாமல் போகும் நிலை ஏற்பட்டது.
உடனே கமல் வேறு வழியின்றி நிஜ டைரக்டரான தனது பெயரையே இந்தப் படத்தில் இயக்குனர் பெயராக்க முடிவு செய்துவிட்டார். இதை அவர் ட்விட்டரிலும் அறிவித்துள்ளார். படப்பிடிப்பு ஓரிரு மாதங்களே என்பதால் இந்த முடிவை அவர் எடுக்க நேர்ந்துள்ளது என்கிறார்கள்.
கமல் சார் உங்களுக்குத் தான் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் எவ்வளவோ இயக்குநர்கள் அப்ரண்டீஸ்களாக கிடைப்பார்களே. சந்தான பாரதி, சுந்தர் சி, கே.எஸ்.ரவி, ரமேஷ் அரவிந்த் என்று பெரிய லிஸ்ட்டே இருக்கிறதே. பின் ஏன் வருத்தம் ?