ஐஸ் ஏஜ் படங்களின் வரிசையில் ரிலீஸாகியிருக்கும் ஐந்தாவது பாகம் தான் ஐஸ் ஏஜ் – கொலிஷன் கோர்ஸ் (Ice Age: Collision Course). முந்தைய படங்களின் கேரக்டர்களோடு புதிய கேரக்டர்கள் சிலவும் சேர்ந்திருக்கும் படம்.
பூமியில் யானைகளான மானியும், எல்லியும் தங்கள் திருமண நாளை கொண்டாடுகின்றன. அந்நேரம் விண்கற்கள் புகுந்து அவர்களை பயமுறுத்துகின்றன. விண்கற்களிலிருந்து தப்புவதற்கு ஐடியா கொடுக்க வருகிறது பக். பக் அறிவுரையின்படி பல ஆண்டுகளுக்கு முன் விழுந்த ஒரு விண்கல்லை தேடி அனைவரும் பயணிக்கிறார்கள்.
இந்த படத்தின் முக்கிய தூண் பக். நிறைய காமெடி, கொஞ்சம் ஆக்ஷன் என மேன் ஆஃப் தி மூவி பக் தான். காதல் எபிஸோடுகளில் கலகலக்க வைக்கிறது சிட். படத்தின் தமிழ் பதிப்பில் பஞ்ச் வசனங்கள். குழந்தைகள் படத்தில் கொஞ்சம் டூ மச் என்று தோன்றும்படி இருக்கின்றன..
ஆரம்பக் காட்சிகளில் காதல் தோல்வியில் சுத்தும் சிட் மீண்டும் காதலில் விழும் காட்சிகள் படத்தின் எக்ஸ்ட்ரா காமெடி போஷன்! “என் கால் அழகுல கால்வாசி கூட யாரும் இருக்க மாட்டாங்க” என்று காதலியை இம்ப்ரெஸ் செய்யும் காட்சிகளில் திரையரங்கமே அதிர்ந்தது.
இளமையாக வைத்திருக்கும் விண்கள்கள், எதிர் எதிர் துருவம் காந்த சக்தியில் ஈர்க்கும், இதனால் ஏற்படும் எலக்ட்ரிசிட்டியால் என்னவாகும் என்பதை கற்பனைக்கலந்த அறிவியல் விந்தைகளையும் காட்சிகளில் கொண்டுவந்து, விளையாட்டாய் விஷயங்களை புகுத்தியிருக்கிறது இந்த ஐஸ் ஏஜ்.
கதையில் பெரிய ட்விட்ஸ்கள் எதுவும் இல்லை.. முந்தைய படங்களை ஒப்பிடும்போது இந்தப் படம் கொஞ்சம் சுமார் ன். ஆனாலும் ஓ.கே.யாகிவிடும் இந்தக் காமெடி.