பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ திரைப்படத்தில் தன்னுடைய எளிமையான பாவனைகளாலும், எதார்த்தமான நடிப்பாலும் சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவர் ‘கயல்’ சந்திரன். வளர்ந்து வரும் கதாநாயகனான ‘கயல்’ சந்திரனுக்கு இந்த ஜூலை 14 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் ‘கயல்’ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவும், ஜூலை 15 ஆம் தேதி காலை சென்னையில் நடைபெறும் ‘கயல்’ சந்திரன் நடிக்கும் திரைப்படப் பூஜையும் இரட்டிப்பு சந்தோஷங்கள்.

‘டூ மூவி பஃஃப்ஸ்’ (2 எம் பி) சார்பில் பி எஸ் ரகுநாதன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சுதர் இயக்கும் பெயர் சூட்டப்படாத திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ‘கயல்’ சந்திரன்.இந்த படத்தை ‘டூ மூவி பஃஃப்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது ‘Across Movies’. அந்த படத்தின் பூஜை வருகின்ற ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

‘கயல்’ திரைப்படத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும், எனக்கு ஏற்றவாறு இருக்கும் கதையம்சம் கொண்ட படங்களை தான் நான் தேர்வு செய்து வருகிறேன். ஒரே மாதிரியான கதை களங்களில் நடிக்க நான் விரும்பவில்லை. மாறாக ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு புதுமையை வழங்க தான் நான் ஆசைப்படுகிறேன்.” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இளம் கதாநாயகன் ‘கயல்’ சந்திரன். ‘கயல்’ சந்திரன் தற்போது ‘கிரகணம்’ மற்றும் ‘ரூபாய்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Related Images: