நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பண்முகம் கொண்ட ஆக்ஷன் கிங். இப்போது அர்ஜுன் முதன்முறையாக தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தை, தனது ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார்.
இளமை துடுக்கான வேடத்தில் ஜஸ்வர்யா அர்ஜுன் நடிக்க, நடிப்பு கலையை முறையே பயின்ற சந்தன் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் புது வரவாக ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் கலக்கிய இளம் இரட்டையர் நடன இயக்குனர்கள் பூணம் ஷா, பிரியங்கா ஷா இளமை ததும்பும் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கவுள்ளனர்.
பாரம்பரிய பரதநாட்டிய நடனத்துடன் மேற்கித்திய நடனத்தை உட்புகுத்தி புதிய நடன அசைவுகளை உருவாக்கியதில் வித்தகர்களான இவர்கள் ரம்தா யோகி – தால் டான்ஸ் பரதநாட்டியம் ஃப்யுசன் – விஜிஒ கர்நாடிக் டிராப் உள்ளிட்ட இசை பாடல்களுக்கு நடனம் அமைத்து பல ரசகர்களின் பாராட்டை பெற்றுள்ளனர்.
பூணம் ஷா, பிரியங்கா ஷா ஆகியோரின் புதிய நடன அசைவுகள் பார்த்து பிரமித்துப்போன ஜஸ்வர்யா அர்ஜுன் இவர்களை தான் நடிக்கும் படத்தில் இடம்பெரும் ஒரு முக்கிய பாடலுக்கு நடன இயக்குனர்களாக பணியாற்ற வேண்டுமென தன் தந்தை அர்ஜுனிடம் வேண்டுகோள் வைத்தார். பூணம் ஷா, பிரியங்கா ஷா ஆகியோரின் இசை நடன விடியோக்களை பார்த்து அவர்களது நடன திறமையை ரசித்து தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார் அர்ஜுன்.
தந்தையின் சம்மதத்தை பெற்றதும் இளம் நடன இயக்குனர்களை தொடர்பு கொண்டு தற்போது நடிக்கும் படத்தின் கதையையும் பாடல் இடம்பெறும் சூழ்நிலையையும் விளக்கியுள்ளார் ஜஸ்வர்யா அர்ஜுன். அது பிடித்துப்போன பூணம் ஷா, பிரியங்கா ஷா மும்பை மாநகரத்துக்கு விமானம் மூலம் பறந்து வந்து பாடலுக்கான நடனத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.
மும்பையில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்பாடலிற்கு ஜஸ்வர்யா அர்ஜுன் மிகவும் சிறந்த முறையில் நடனமாடியதாகவும், அனைத்து நடன அசைவுகளையும் மிகவும் எளிதாக கற்றுக்கொண்டார் என்றும் பூணம் ஷா, பிரியங்கா ஷா தெரிவித்தனர்.
இப்படத்தில் சந்தன், ஐஸ்வர்யா அர்ஜுன் இவர்களுடன் இயக்குனர் கே.விஸ்வநாத், சுஹாசினி, “மொட்டை” ராஜேந்திரன், மனோ பாலா, சதிஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
ஒளிப்பதிவு – H.C.வேணு கோபால்
இசை – ஜெஸ்ஸி கிப்ட்
படத்தொகுப்பு – கே கே
கலை இயக்கம் – சசிதரர்
சண்டை பயிற்சி – “Kick Ass” காளி
மக்கள் தொடர்பு – நிகில்
தயாரிப்பு மேற்பார்வை – கே.கவிசேகர்
இணை தயாரிப்பு – பாலாஜி
கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் – அர்ஜுன்
தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல்