’பாஜக திறந்துள்ள கதவு வழியாக ரஜினிக்கு பதில் வேறு ஏதாவது நுழைஞ்சிடபோகுது’ என்று சீமான் கிண்டல் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும் தமிழகத்துக்காக இதுவரை எந்த பிரச்சினைக்கும் ரஜினி குரல் கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில், சி.பா. ஆதித்தனார் நினைவு தினத்தையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், பாஜகவிடம் தமிழக அரசு அடமானம் வைக்கப்பட்டுள்ளது. ரஜினிக்காக பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்று அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். இது பா.ஜ.க.வின் பரிதாப நிலையையே காட்டுகிறது.
அதே போல் சிஸ்டம் கெட்டுவிட்டது என்பது ரஜினிக்கு இப்போதுதான் தெரியுமா? பத்துப்பதினந்து ஆண்டுகள் அவர் இமயமலையில் இருந்துவிட்டுத் தற்போதுதான் தமிழகம் திரும்பி ஞானம் வந்தது போல் உளறுகிறார் ரஜினி’ என்றார் சீமான்.
சீமானின் பேச்சைக்கேட்டு பிரமித்துப் போயிருக்கிறேன் என்று பாராட்டிய ரஜினியை தொடர்ந்து வெளுத்துக்கொண்டிருக்கிறார் சீமான்.