ரிலீஸான ஒருவாரமாய் பெரும்பாராட்டுகளை குவித்துக்கொண்டிருக்கும் ‘அருவி’ படம் குறித்து மெல்ல சில சர்ச்சைகள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன.

அதில் ஒன்று அருவியானது 2011-ல் வெளிவந்த சில சர்வதேச விருதுகளை வென்ற ‘அஸ்மா’ என்ற அரேபியப் படத்தின் அப்பட்டமான காப்பி என்பது.

இதோ முகநூலில்

Iyyappa Madhavan
21 minsCoimbatore

அருவி ASMAA என்ற எகிப்து திரைப்படத்திலிருந்து உருவப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். உருவிச் செய்வது தப்பில்லை.

அதை நேர்மையாய் ஒத்துக்கொள்ள வேண்டும்.

மணிரத்னம் பாலச்சந்தர் போன்றோரும் இதைச் செய்தவர்கள்தான். ஆனால் அப்போது டிவிடி கிடைத்ததில்லை. அதனால் சொந்தக் கதை என்று நம்ப வைத்தார்கள்.

இனி இதைச் செய்ய முடியாது.

 

Related Images: