’அருவி’ படத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தாறுமாறாக விமர்சித்ததை அடுத்து கடந்த இரு தினங்களாக ட்விட்டரில் புலம்பித்தள்ளிக்கொண்டிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதுவும் சாதாரண புலம்பல் இல்லை. ‘பிராமண சமூகத்தில் பிறப்பது எய்ட்ஸ் நோயை விடக் கொடுமையாக உள்ளது’ என்கிற அளவுக்கு இருக்கின்றன அவரது ட்வீட்டுகள்.
இந்தப்படம் தந்த அதிர்ச்சியால் உச்சக்கட்ட மன உளைச்சலுக்கு ஆளாகி மன நிலை பிறழ்ந்தவர் போல்’ அந்த டைரக்டரை போலீஸ்ல புடிச்சிக்குடுக்காம ஓய மாட்டேன்’ என்று பிதற்றித்திரியும் லட்சுமிம்மா விரைவில் ‘ட்ரீட்மெண்ட்’ எடுக்கவேண்டிய நிலைக்கு ஆளாகக் கூடும் என்கிறார்கள் அவரது பாலக்காடு பிராமண வட்டாரத்தினர்.