சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியிடம் இரண்டரை கோடி பிச்சை பெற்று அவரது வாரிசை ரஜினி கமலுக்கு இணையாக புரமோட் செய்தது உட்பட பல கண்றாவி காட்சிகளுடன் நிறைவுபெற்ற மலேசிய நட்சத்திரக் கலைவிழா நிகழ்ச்சி தொர்டர்பாக நடிகர்கள் சுமார் 200 பேர் விஷால் மீது கொலவெறியில் இருக்கிறார்கள்.
மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவுக்கு போகலாம் என்று ஆசை காட்டி, சுமார் 130 பேரை விமான நிலையம் வரைக்கும் வரவழைத்த விஷால் அண் கோ, கடைசி நேரத்தில் ‘டாடா’ காட்டிவிட்டு பறந்துவிட்டதாம். இன்னும் சிலருக்கு ஏன் அழைத்துச்செல்ல முடியவில்லை என்பதற்கு முறையான பதில் கூட இல்லையாம்.
தொங்கிப்போன முகத்தோடு ரிட்டர்ன் ஆகிவிட்டார்கள் இவர்கள். ஏமாந்தவர்களில் நடிகர் பார்த்திபன், டைரக்டர் விக்ரமன் போன்ற தலைகளும் அடக்கம்.
இந்த அதிருப்தி ஒருபுறம் இருக்க… சென்னையிலிருந்து முன்னணி நிருபர்களை அழைத்துச் செல்வதாக திட்டமிட்ட விஷால், கடைசி நேரத்தில் அவர்களுக்கும் பெப்பே காட்டியதுதான் விபரீதம். எப்படியோ… ஏரோப்ளேன் றெக்கையை பற்றிக் கொண்டாவது பறந்துவிட வேண்டும் என்று துடித்த ஒரு சில துடிப்பான நிருபர்களுக்கு மட்டும் மலேசியா கலை நிகழ்ச்சியை கண்டு மகிழும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேற்படி சொதப்பல்களை நக்கலடித்த முன்னாள் காமெடியன் எஸ்.வி.சேகர்,