இத்தனை இயல்பான கதையை,மனிதர்களை நிலக்காட்சியை தமிழ்த்திரை இதுவரை கண்டதில்லை.
படத்தில் நடித்திருந்த அத்தனை மனிதர்களும் திருக்குறளைப் போல அளவாக,செறிவாக நடித்திருக்கிறார்கள்.
ஒரு மலைக்காட்டில் அருகிருந்து ஒரு எளிய மக்களின் வாழ்க்கையப் பார்த்துவிட்டு வந்த உணர்வெழுகிறது.
ஒருநல்ல கலை என்பது சமகால வாழ்வியலை அரசியலை பதிவு செய்ய வேண்டும். மக்களின் ரசனையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்தத் திரைப்படம் அதைச் செய்கிறது.
ஒரு அழகான திரை அனுபவம்…அதை சொல்லில் சொல்ல இயலாது திரையரங்கம் சென்று அனுபவித்து பாருங்கள். நம் இழப்பின் ஒரு துளி கண்ணீர் உங்கள் கண்களிலும் ஒரு ஏலம்பூவைப் போல பூக்கும்.
இயக்குநர்தோழர் லெனின் குழுவினருக்கும், ஒளிப்பதிவாளர் நண்பன் தேனி ஈஸ்வருக்கும்,’’
படத்தொகுப்பாளர் மு.காசி விஸ்வநாதன் அவர்க்ளுக்கும்,
தமிழ் இசைத் தாய் இசைஞானி இளையராஜாவுக்கும்
வாழ்த்துக்களும் அன்பும்.
முகநூலில் இயக்குநர் தாமிரா