இசைஞானி இளையராஜா பின்னணி இசை அமைப்பதில் தெரியும் கலை நுணுக்கமும், தெளிவான நேரக் கணக்கீடுகளும், கச்சிதமாய் காட்சியை தழுவி நிற்கும் அழகும் பற்றி நிறைய அனுபவப் பகிர்வுகள் உண்டு.
1986 ல் பாரதிராஜாவின் இயக்கத்தில், சத்யராஜ் நடித்த, கடலோரக் கவிதைகள் படத்தின் ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு இளையராஜா பின்னணி இசை அமைப்பதை லைவ்வாக ஸ்டுடியோவின் உள்ளேயே கேமரா கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.
அந்தக் காணொலியை கீழே பாருங்கள். முதல் பாதியில் சத்யராஜ் , ரேகா நடிக்கும் அந்தக் காட்சிக்கு இளையராஜா இசையமைப்பதும், பிற்பாதியில் படத்தில் அதே காட்சி பின்னணி இசையோடு சினிமாவில் காட்டப்படுவதையும் பாருங்கள்.