நடிகை நயன்தாராவின் திருமணம் தொடர்பான செய்திகள் சற்று ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் கன்னியாகுமரி கோவிலுக்கு காதலனுடன் தரிசனம் தந்து மீண்டும் அச்செய்திகளுக்கு எண்ணெய் வார்த்திருக்கிறார். இதையொட்டி வரும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களோடு அவரது திருமணம் நடக்கக்கூடும்.

நடிகை நயன்தாரா, தனது காதலன் விக்னேஷ்சிவனுடன்நேற்று மாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார்.அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, பகவதி அம்மன் சன்னதி, தர்ம சாஸ்தா சன்னதி, சூரிய பகவான் சன்னதி ஆகியவற்றில் பய பக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

இதற்கிடையே நயன்தாரா வந்திருப்பதை அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள் நயன்தாராவை பார்க்க முண்டியடித்து கொண்டு ஆர்வம் காட்டினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.இதைதொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர், போலீசார் நயன்தாராவையும், விக்னேஷ் சிவனையும் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து காரில் அனுப்பி வைத்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்பு குமரி மாவட்டத்திற்கு வந்து கன்னியாகுமரி, சுசீந்திரம் கோவில்களில் சாமி தரிசனம் செய்து சென்றார் என்பதால் நயனின் திருமணமும் விரைவில் நடக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Related Images: