அன்பு இயக்குநர் அண்ணன் சேரன்!
கடந்த சில மாதங்களாக நாங்கள் மிக நெருக்கமான நட்பை வளர்த்துக்கொண்டோம்.காரணம் சினிமா மீது அவருக்குள்ள பெருங்காதல். எனக்கு சினிமா மீதுள்ள காதல். இந்த ரெண்டும் தானாகவே ஒரு புள்ளியில் ஒன்றிணைந்தது.கருத்துக்கள் உடன்படும்போது அங்கொரு பெருநட்பு பிறக்கும். அப்படித்தான் மனதில் ஒன்றும் நாவில் ஒன்றும் வைத்துக்கொள்ளத் தெரியாத அந்த மனிதனிடம் வெகு எளிதாக ஒட்டிக்கொள்ள முடிந்தது.
சேரன் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நிற்பார் என்பார்கள். உண்மைதான். நீங்கள் இறுதியாக எடுக்க இருக்கும் முடிவை அவர் முதல் பாராவிலேயே முடித்துவிடுவார். அவர் தவறல்ல. நேரவிரயம் செய்யும் நாம்தான்.இந்த நூற்றாண்டில் மனங்களின் செம்மையையும் வாழ்வியல் வழிகாட்டலையும் பாசத்தையும் காதலையும் சொன்ன படங்களில் இவரது படங்கள் முதலிடங்களை எப்போதும் தக்க வைத்திருக்கும்.
கமர்ஷியல் களத்தில் இறங்கியிருந்தால் இன்னமும் ஹீரோக்களுக்கு சொம்பு தேய்க்கும் குப்பைகளைத் தந்து வெற்றிக்கொடி கட்டிக்கொண்டிருந்திருப்பார்.நல்ல படங்களின் முயற்சி. சினிமாவை எப்படியாவது காப்பாற்றிவிட மாட்டோமா என புதிய தொழில்நுட்பத்தின் முயற்சி.. பேச்சிலும் எண்ணத்திலும் இருபத்தி நான்கு மணி நேரமும் சினிமாவைக் கனவு கண்டுகொண்டிருக்கும் “கலையுலகப் போராளி” அவர்.
சிலவற்றில் எடுத்த முயற்சியில் அவர் தோற்றிருக்கலாம். ஆனால் அது தோல்வியல்ல. அவர் செய்தது சரிதான் என ஒப்புக்கொள்ளும் காலம் அருகில்.
எனக்கு மனதின் அருகில் நின்று வழிகாட்டுபவர். நான் சினிமாவுக்காக குரல் கொடுப்பதை தன்மையோடு ஏற்றுக்கொண்டு அதை நெறிப்படுத்துபவர்.
உடன் இருக்கும் நண்பன் அண்ணன் போராளி இப்படி எந்த உறவிலும் அவரை ஏற்கலாம். இந்தப் போராளி தலைநிமிர்ந்து இன்னும் அற்புதப்படைப்புகளை தரவேண்டும். அது இயக்குநர் சேரனால் மட்டுமே தரமுடியும். விரைவில் வழிவாசல் பிறக்கட்டும்.
உன்னால் தமிழுலகம் செழிக்கட்டும். கசப்புகளைப் புறந்தள்ளிவிட்டு இனிக்க இனிக்க வாழ் அண்ணா.
போராளியே தீக்குஞ்சுகள் பொரித்துக்கொண்டேயிரு. ஒருபோதும் மனம் சோர்ந்துவிடாதே. இரண்டாவது இன்னிங்ஸ் இமாலய மலைப்பாய் இருக்கவேண்டும். காத்திருக்கிறேன் உம் படைப்புகளின் ரசிகனாய். வென்றெடு. துணை நிற்போம்.இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்ணா..
முகநூல் பதிவில்…இயக்குநர்,தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி