உன்னாவ் மஹாராஜ்கள். 9.12.2019


ஆக்ரா டில்லி தேசிய நெடுஞ்சாலை ஒரு விபத்து ஏற்படுகிறது, அந்த விபத்தில் இரண்டு ஆண்கள் படுகாயமடைந்து விடுகிறார்கள்.

அதில் ஒருவரது மனைவி வயது 22 விபத்தில் சிறு காயங்களுடன் காரில் இருந்து இறங்கி சாலையில் உதவி கேட்கிறார், அப்போது ஒருவர் தனது பரிவாரங்களுடன் வருகிறார்.
காப்பாற்றுகிறேன் என்று கூறி அந்த பெண்ணை அருகில் உள்ள சாலை ஓர உணவு விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.
இந்த விவகாரம் நீதிமன்றம் செல்கிறது, சொன்ன சொல் தவறாத அந்தப் பிரமுகர் பெண்ணின் உறவினரை கொலை செய்துவிடுகிறார்.

இந்த வழக்கில் அந்த குற்றவாளி நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.

பிறகு பிணையில் வெளிவருகிறார். தேர்தலில் நிற்கிறார், நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக ஆகிறார்.

அவர் தான் சாமியார் சாக்‌ஷி என்பவர் இவரை ஊடகங்கள் சாக்‌ஷி மகாராஷ் என்று எழுதுவார்கள். இவரும் அதே உன்னாவ் தான்.

எதே உன்னாவ் ? 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதற்கு நீதி கேட்டு நீதிமன்றம் போன அச்சிறுமியின் தாயார் மற்றும் உறவினரை லாரி ஏற்றி கொலை செய்த பாஜக சட்டமன்ற உறுப்பினரும் அதே உன்னாவ் நகர் தான்,

தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று சாட்சி கூறி நீதிமன்றம் சென்ற ஒரு 25 வயது பெண்ணை போனவாரம் நடுத் தெருவில் உயிரோடு தீவைத்து எரித்து கொன்ற மேல்சாதி வேதியர்களும் அதே உன்னாவ் தான்.
தீயில் எரிந்தபடியே ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று உதவி கேட்டு கதறியபடியே
ஒரு கிமீ தூரம் வரை ஓடிய அந்தப் பெண் கடைசியில் விழுந்து பின் இறந்து போனார். அதே உன்னாவ் நகர் தான்.

— முகநூலில் ஜெயராமன்.

Related Images: