கால்ஷீட் குளறுபடிகளால் ‘தளபதி 64’படத்தின் பழைய வில்லன் நடிகர் தூக்கி அடிக்கப்பட்டு புதிய வில்லன் நடிகர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இச்செய்தியை படக்குழுவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தளபதி 64 முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது.விஜய், விஜய்சேதுபதி ஆகியோர் நடித்து வருகிற இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கர்நாடகா ஷிமோகாவில் நடக்கப்போகிறது. சிறைச் சாலை தொடர்பான காட்சிகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தவர் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ்.கால்ஷீட் தேதிகள் ஒத்து வரவில்லை என தற்போது சொல்லி விலகி இருக்கிறார்.படத்தை ஒப்புக்கொள்ளும்போது எல்லாம் சரியாக இருந்ததால்தானே கையெழுத்துப் போட்டிருப்பார்? விளக்குவதற்கு வேறு காரணம் எதோ இருந்திருக்கிறது.

ஆனாலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது கைதி பட வில்லன் அர்ஜூன்தாஸை ஒப்பந்தம் செய்து விட்டார்.அவரோ மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார்.“தளபதி,மக்கள் செல்வன் இரு பெரிய நடிகர்களுடன் நடிப்பதற்கு பெருமைப் படுகிறேன். கைதிக்குப் பிறகு எனக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது.” என்று ட்விட் செய்திருக்கிறார் அர்ஜூன்தாஸ்.

Related Images: