CAA – Citizen Amendment Act / Bill (CAB) அதாவது குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா. இச்சட்டத்தை ஏன் திருத்தினார்கள்?

NRC (National Register of Citizens) அதாவது தேசிய குடிமக்கள் பதிவேடு. இவை இரண்டையும் இணைக்கும் விஷயம் என்ன ?

NRC. சொல்வது என்ன …

“Simply being born in India or having parents who were born in India is not enough …The NRC requires you or your parents to have been born before a certain cut -off date and the cut-off date is March 24,1971 …”

அதாவது மார்ச் 1971 க்கு முன்பு நீங்கள் அல்லது உங்கள் தாய்தந்தை பிறந்திருப்பதாக நிரூபிக்கவேண்டும். அதற்கு 1971 முந்தைய ப்ரூப் டாக்குமெண்ட் ஏதாவது சமர்ப்பிக்க வேண்டும்.

புரிகின்றதா வில்லங்கம் …

நீங்களோ உங்கள் பெற்றோரோ இந்தியாவில் பிறந்திருப்பதால் மட்டுமே நீங்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் அல்ல … உங்கள் ஆதார், பாதார், வாக்காளர் அட்டையெல்லாம் செல்லாது செல்லாது. ஏனென்றால் அவையெல்லாம் 1971க்கு அப்புறம் நீங்கள் வாங்கியிருப்பீர்கள்.

நீங்கள் குறிப்பிட்ட கட்ஆப் தேதிக்கு முன்பே இந்தியாவில் உள்ளீர்கள் என்பதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் …!

பொதுவாக குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி காவல்துறைதான் ஒருவர் குற்றவாளி என்பதை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் …

ஆனால் NRC படி நீங்கள் குடிமகன்தான் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் (Documentary Evidences) ஆவணங்கள் மூலமாக நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் …

சரி …அதற்கு என்ன டாகுமெண்ட்ஸ் தேவை என்பதைப் பார்ப்போம் …

LIST A மற்றும் LIST B என இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட டாகுமெண்டுகள் உங்களிடம் இருக்க வேண்டும் …

LIST -A …

1.Electoral rolls upto March 25,1971
2.NRC of 1951
3.Land and Tenancy Records
4.Citizenship certificate
5.Permanent resident certificate
6.Passport
7.Bank or LIC documents
8.Permanent Residential Certificate
9.Educational certificates and court orders
10.Refugee Registration certificate

LIST -B

1.Land documents
2.Board or university certificates
3.Bank/LIC/Post office records
4.Birth certificate
5.Ration card
6.Electoral rolls
7.Other legally acceptable documents
8.A circle officer or Grama panchayat secretary certificate for married women

விஷயம் என்னவென்றால் LIST – A டாகுமெண்ட்ஸ் கட் ஆப் தேதிக்கு முந்தியதாக இர்ர்க்க வேண்டும் …அதாவது மார்ச் 25,1971 க்கு முந்தைய டாகுமெண்ட்ஸ்ஸாக அவை இருக்க வேண்டும் …!!

வில்லங்கம் புரிகிறதா …

இந்த LIST -A டாகுமெண்ட்ஸ்ஸுக்கு சப்போர்டிவ்வாக LIST -B டாகுமெண்ட்ஸ்ஸை நீங்கள் காட்ட வேண்டும் …!!

உங்களில், உங்கள் அம்மா அப்பாக்களுக்கும் சேர்த்து, எத்தனை பேருக்கு இது சாத்தியப்படும் என்பதை நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் …

உங்களால் அப்படிக் காட்ட இயலவில்லையென்றால் உடனடியாக நீங்கள் கைது செய்யப்பட்டு Detention Camp ல் அடைக்கப்படுவீர்கள் …!

அஸ்ஸாமில் உள்ள Detention Camp என்பது அங்குள்ள சிறைச்சாலைகள்தான் …!

ஆக …மேற்கூரிய டாகுமெண்டுகள் இல்லையென்றால் நீங்கள் சிறைக்குச் செல்வீர்கள் …மனைவி,குழந்தைகளுடன் …!!

மேல்முறையீட்டிற்கு நீங்கள் Foreign Tribunalல் வழக்கு நடத்தலாம் அல்லது Concern High Courtல் வழக்கு நடத்தலாம் …

அதிலும் ஸ்டே அல்லது ஜாமீன் கிடைத்தால் மட்டுமே நீங்கள் வெளியே வர இயலும் …!!

சரி CABயில் எதுக்கு ஹிந்துக்களுக்கு மட்டும் குடியுரிமைன்னு திருத்தம் கொண்டு வந்தாங்க?

அஸ்ஸாமில் இப்படி NRCஆல் அகதி முகாம்களுக்கு விரட்டி ஒதுக்கப்பட்ட 20 லட்சம் பேரில் சுமார் 6 லட்சம் இந்துக்களுக்கும் டாக்குமண்ட்ஸ் இல்லை. அவங்களை இப்போ CAB ல் இந்துன்னா போதும் குடியுரிமை தரலாம்னு சேத்ததன் மூலம் இந்துன்னு நிரூபிச்சா உள்ளே சேர்த்துக்கலாம். இதுதான் அவங்க இந்து முஸ்லீம்னு பிரித்தாளும் ஐடியா.

அதனால்தான் சொல்கிறேன் பாஜக மக்களுக்கு எதிரான கட்சி என்று …

இதனால் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது இந்துக்களே …!

பல இலட்சம் இந்துக்கள் Detention Campல் சொத்திழந்து,மானம் இழந்து மனைவி குழந்தைகளுடன் சிறையில் உள்ளார்கள் …!! முஸ்லீம்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.

இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பகீர் என்கிறதல்லவா …

நாடு முழுவதும் இதே NRC கணெக்கெடுப்பு நடத்தப்படும் என பாஜக நேற்று பகிரங்கமாக அறிவித்து விட்டது …

1951லிருந்து ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் தாராளமாக மகிழ்ச்சியாக இருங்கள் …

நான் விசாரித்தவரை பலரும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு தவிர ஒன்றுமில்லை என்றே சொல்கிறார்கள் …

இந்த NRC பயங்கரத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் …!

அத்தனை டாகுமெண்ட்டுகள் இருந்தாலும் ஒவ்வொரு அரசு அதிகாரியிடம் நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் …

இளம்பெண்களின் கதி என்னாகும்? சாதாரண எக்ஸாம் இன்டர்னெல் மார்க் போடவே மாணவிகளை படுக்கைக்கு அழைக்கும் காலம் இது …!

குடியுரிமை தருவது என்றால் சும்மாவா …எது வேண்டுமானாலும் நடக்கும் ….

ஒரு வழக்கறிஞராக நான் சொல்வது இந்த CAA வே நமது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு ஆர்ட்டிக்கிள் -14 க்கு எதிரானது என உறுதியாகச் சொல்லுவேன்

NRC யைப் பொறுத்த வரை …

நாங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு ரயிலை விற்போம்,துறைமுகத்தை விற்போம்,நிலத்தை விற்போம்,பொதுத் துறை நிறுவனங்களை விற்போம் …

மீறிக் கேள்வி கேட்டால் …

நீ இந்தியனா என்று திருப்பிக் கேட்போம் …நீ டாக்குமெண்டைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டியதுதான் …

டாகுமெண்ட் இல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது Detention Camp …

முடிவு இனி 130 கோடி மக்கள் கைகளில் …

தட்ஸ் ஆல் …

தோழமையுடன்

வழக்கறிஞர் திலகர்

மூத்த வழக்கறிஞர் #Thilakar #Sspk அவர்களின் வாட்ஸப் பதிவு . விளக்கங்களுடன்.

Related Images: