‘தர்பார்’பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குறித்து நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ் பேசிய பேச்சுக்கு உயர்தர நகைச்சுவை உணர்வுடன் பதிலளித்திருக்கிறார் சீமான்.

நேற்று நடந்த தர்பார் விழாவில் இயக்குநர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பேசியதாவது , ‘எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் என்னை சீண்டி அரசியல் கத்துக்க வெச்சுடாதீங்க. ரஜினியை யார் தவறாக பேசினாலும் நான் அதற்கு பதில் சொல்வேன்.படத்திற்காக அரசியலுக்கு வருகிறார் என்று சொல்கிறார்கள். பப்ளிசிட்டிகாக வருகிறாரா? ஏய், என் தலைவரே பப்ளிசிட்டிடா’ ‘தான் அரசியலுக்கு வருவேன்னு சொல்லும்போது கூட ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி அவர்களை புகழ்கிறார். பாபா படத்திற்கு நஷ்டத்தை திருப்பி கொடுத்தார். யாராவது செய்வார்களா?

“எனக்கு அவரு பேர சொல்லக்கூட பிடிக்கல .நான் இப்படி பேசுனதுக்காக என் தலைவர் என்னிடம் கோவிச்சுக்கிட்டாக்கூட பரவாயில்ல. ஆனா சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதில்லை.‘பாட்ஷாவை மிஞ்சும் அளவுக்கு தர்பார் அமையும் என எனக்கு தோன்றுகிறது. கமல், ரஜினி இருவரும் கை கோர்த்து நடக்கும்போது புரியுது. இன்னும் என்ன நடக்குமோ? அதிசயம் அற்புதமே ரஜினி தான்’ என்று தெரிவித்தார்.

அதற்கு சீமான் இன்று நக்கலுடன் ” தம்பி, லாரன்சு….நீ எந்த நாட்டைப் பத்தி சொல்றேன்னு தெரியல.நான் என் நாட்டுக்காக, என் மக்களுக்காக பேசி வர்றேன்” என செம நக்கலாக பதில் சொல்லியிருக்கிறார்.

Related Images: