ரஜினியின்’தர்பார்’பட முதல் பாடல் வெளீயாகி அது ஏகப்பட்ட கிண்டல்களுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், அதன் வியாபார நிலவரம் படு மந்தமாக இருப்பதாகவும் இப்போதைய நிலவரப்படி பட நிறுவனத்துக்கு சுமார் 50 கோடி வரை நஷ்டம் ஏற்படக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் 2020 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.தற்போது இப்படத்தின் வியாபாரம் நடந்துவருகிறது. ஆனால் பட நிறுவனம் எதிர்பார்த்தபடி வியாபாரம் நடக்கவில்லையாம். அதோடு எல்லாப்பகுதிகளிலும் இவர்கள் சொல்லும் விலைக்கு படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. காரணம் முதலில் தனியாக ரிலீஸ் ஆகிறது என்று சொல்லப்பட்ட இப்படத்துடன் சுமார் அரை டஜன்யுக்கும் மேற்பட்ட படங்கள் மோதக் காத்திருப்பதுதான் என்கிறார்கள்.

இந்தப்படத்தின் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையாக ஐம்பது கோடி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்களாம். ஆனால் 35 ஐத் தாண்டி தொலைக்காட்சி நிறுவனம் வரவில்லையாம்.அதேபோல, இப்படத்தின் வெளிநாட்டு உரிமையில் ஐம்பது அல்லது அதற்கு மேல் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 33 கோடிக்கு மட்டுமே வியாபாரமாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவை மட்டுமின்றி, இந்தியிலும் பெரும் அதிர்ச்சியைப் பட நிறுவனம் எதிர்கொள்வதாகச் சொல்கிறார்கள். 2.ஓ படம் இந்தியில் 110 கோடிக்கு விற்கப்பட்டதாம், காலா வுக்கு 70 கோடி கிடைத்ததாம். அதன்பின் வந்த பேட்ட 50 கோடிக்கு விற்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதே ஐம்பது கிடைத்தால் நல்லது என்று எதிர்பார்த்த நிலையில், அதில் சரிபாதி குறைத்து 25 கோடிக்குப் படத்தைக் கேட்கிறார்களாம்.இப்படி எல்லாப் பக்கங்களிலும் விலை குறைவதால் பட நிறுவனம் அதிர்ச்சியில் இருக்கிறதாம்.தர்பார் படத்துக்கு சுமார் 240 கோடி செலவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்வளவு பணத்தைத் திரும்ப எடுத்துவிட முடியுமா? என்கிற அச்சத்தில் நிறுவனம் இருக்கிறதாம். தற்போதைய நிலவரப்படி லைகா நிறுவனத்துக்கு சுமார் 50 கோடி வரை நஷ்டம் ஏற்படுவது உறுதி என்கிறார்கள்.

Related Images: