‘அன்புள்ள ரஜினிகாந்த்’படத்தில் ரஜினியின் செல்ல மகளாக அடுத்து காலப்போக்கில் ‘எஜமான்’,’வீரா’,’முத்து’படங்களில் அவரது காதலியாக மனைவியாக நடித்த மீனா 24 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தலைவர் 168’படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.இச்செய்தியை சில நிமிடங்களுக்கு முன் தயார்ப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்ததிலிருந்து திரையுலகமே திகைப்பில் ஆழ்ந்துள்ளது.
விஸ்வாசம் சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் ‘தலைவர் 168’படத்தின் சக நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கத்துவங்கியுள்ளது. அதன்படி படத்தின் நாயகியாக தேசிய விருதுபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் அறிவிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக சன் பிக்சர்ஸ் சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘24 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படத்தில் மீனா என்ற அறிவிப்பை வெளீயிட்டுள்ளது
இது ஒரு குடும்பப்பாங்கான படம் என்பதால் கீர்த்தி சுரேஷின் அம்மாவாக, அதாவது ரஜினியின் அடாவடி மாமியாராக மீனா நடிக்கவிருக்கிறார் என்று தெரிகிறது. இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இதே மீனா ரஜினியின் பாட்டியாக நடிக்கப்போவதையும் இந்தப் பாழாய்ப்போன தமிழ் சமூகம் பார்க்கத்தானே போகிறது.