கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மதுரை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ரு வந்த யாசகன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் துரைவாணன் இன்று உடல்நலக்குறைவால் மதுரையில் காலமானார்.
யாசகன் என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் துரைவாணன். இவருக்கு வயது 48. யாசகன் படத்தில் அங்காடி தெரு மகேஷ், நிரஞ்சனா அனுப் நடித்திருந்தார்கள். சசிகுமார், ஜெய் நடிப்பில் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் இணை இயக்குனராகவும் இயக்குனர் துரைவாணன் பணியாற்றி இருக்கிறார். அதற்கு முன்னர் இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குநராகவும் துரைவாணன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் துரைவாணன், நேற்று மாலை 4.30 மணியளவில் மதுரையில் காலமானார். நாளை மாலை இவரது இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.