தமிழ்ப்படஙளில் பல ஆண்டுகளாகவே தலைகாட்டாமல் இருக்கும் மீனா ஜீ5 நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கரோலின் காமாட்சிஎன்ற வெப் சீரியலில் களம் இறங்கியுள்ளார்.

அந்த சீரியல் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்த்ப்பில் பேசிய மீனா “நான் சினிமாவை விட்டு விலகவே இல்லை.எனக்கேற்ற கதை மற்றும் கேரக்டர் தமிழில் அமையல .அதனால நடிக்கல.இப்பவும் மலையாளத்தில் நான் நடிச்சுக்கிட்டு தான் இருக்கேன் .கரோலின் காமாட்சி வெப் சீரிஸை பொறுத்தவரை இது எனக்கு புது பிளாட்பாரமாக இருக்கிறது.கதையும் கேரக்டரும் பிடித்து இருந்தது.அதனால் தான் இயக்குனர் விவேக் கேட்டவுடன் இதில் நடிக்க சம்மதித்தேன்.சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் நீங்க நடிக்கிறீங்களாமேன்னு கேட்கிறாங்க . எனக்கு தெரியல .அப்படி நடந்த நல்லாத் தான் இருக்கும்.

ரஜினி, கமல் அரசியல் பத்தி என்னை கேட்கிறாங்க எனக்கு என்ன தெரியும்.அவங்க ரெண்டு பேர் கூடவும் சேர்ந்து நடிச்சு இருக்கேன்.அவ்வளவு தான். இதுல நான் என்ன சொல்லப்போறேன்.இதுல எஸ்.ஏ.சி. சார் வேற ரஜினியும், கமலும் இணையணும்னு சொல்லியிருக்கார். அது இன்னும் குழப்பமா இருக்கு.என்ன நடக்கபோகுதுன்னு தெரியல .அதிசயம், அற்புதம் நடக்கப் போகுதுன்னு வேற சொல்றாங்க.அந்த அதிசயத்தையும் அற்புதத்தையும் காண, ஆவலாயிருக்கேன் ஐ ஆம் வெயிட்டிங்…

நீங்க அரசியலுக்கு வருவீங்களா? உங்களுக்கு எந்த அரசியல் கட்சியில் இருந்தும் சேரச்சொல்லி அழைப்பு வரலையான்னு கேட்கிறாங்க. எல்லாக் கட்சியில் இருந்தும் அழைப்பு வந்த வண்ணம் இருக்கிறது.ஆனால், எனக்கு எந்த கட்சியிலும்சேர விருப்பம் இல்லை .இப்போது எனக்கு அரசியல் ஆசை இல்லை .எதிர்காலத்தில் என்ன நடக்கும்னு இப்பவே எப்படி சொல்ல முடியும்”.என்கிறார் மீனா.

ஆனால், சிறுத்தை சிவா படத்துக்கு அழைப்பு வருகிறதோ இல்லையோ, ரஜினி கட்சி துவங்கும்போது மீனாவுக்கு கண்டிப்பாக அழைப்பு வரும். அவரும் ரஜினி கட்சியில் இணைந்து பயணிப்பார் என்றே தெரிகிறது.

Related Images: