ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் தர்பார் படம் வரும் பொங்கலையொட்டி வெளியாகவிருக்கிறது.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா டிசம்பர் 7 ஆம் தேதியன்று நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. அந்நிகழ்ச்சியின் தொகுப்பு சன் தொலைக்காட்சியில் நேற்று ( டிசம்பர் 22) மதியம் ஒளிபரப்பானது.
ராஜபக்சேவின் பினாமி என்று சுபாஸ்கரனைப் பற்றி கூறப்படும் நிலையில், டிசம்பர் 7 அன்று நடந்த நிகழ்வில், படத்தின் தயாரிப்பாளர் என்பதால் சுபாஸ்கரன் பற்றிய ஒரு காணொலி தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது.
சுபாஸ்கரன் செய்த நற்செயல்கள், இனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு அவர் செய்த உதவிகள் என்று ஆகா ஒகோவென்று அந்தக் காணொலி அமைந்திருந்தது.
நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்தக் காணொலியை, நேற்றைய சன் தொலைக்காட்சி ஒளிபரப்பில் நீளம் கருதி கட் செய்துவிட்டார்கள். மேலும் அது கவரன்மென்ட் செய்திப் படம் போல சிங்களர்கள் தமிழர்களுக்கு நல்வாழ்வு அளிக்கிறார்கள் என்று புளுகியதும் ஒரு காரணம்.
அவர் குறித்த காணொலியை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாமல் விட்டதால்
சன் நிறுவனத்தின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாரம் சுபாஸ்கரன்.
மீனவர்களை விரட்டி அடிப்பது முதல், தமிழர் பகுதிகளில் தமிழ் எழுத்துக்களை அழிப்பது வரை, தமிழ்க் கோயில்களுக்குள் புத்த விகாரங்களை கொண்டு வைத்து புத்த கோயில்களாக மாற்றுவது முதல், தமிழ்ப் பகுதிகளில் முழுவதும் சிங்கள ராணுவக் குடியிருப்புகள் உருவாக்கியிருப்பது வரை எதுவுமே இன்று வரை நிற்கவில்லை.
இந்த லட்சணத்தில், தமிழ்நாட்டில் ஈழத்தில் எல்லாமே நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு என்று பீலா விடும் இந்த வீடியோவை எப்படி சன் டி.வியில் போடுவார்கள்?