மணவாசி டோல்கேட்டில் பேச்சுவார்த்தை நடக்கும்போதே உள்ளிருந்து ஒருவர் இரட்டைக்குழல் துப்பாக்கியோடு வந்தார். அதிகாரத்தை காட்டுகிறார்களாம்.


அப்படியானால் மக்களை மிரட்டுவதற்கு துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதும் இவர்களே துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிகாரத்தை பெற்றவர்களாகவும் நடந்துகொள்கிறார்கள் என்றும் தெரிகிறது.
இவையாவும் சட்டத்தைமீறிய தான்தோன்றித்தனமான நடவடிக்கை என சொல்வதற்கு அரசுதரப்பில் யாருமே இல்லை. டோல்கேட்காரர் ஆயுதத்தோடு இயங்கினால் பயணிகள் ஆயுதமின்றி போகவேண்டுமா?


கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களே. முதலில் டோல்கேட் அலுவலகங்களில் வைத்திருக்கும் துப்பாக்கிபோன்ற ஆயுதங்களை அப்புறப்படுத்துங்கள். அங்குள்ள சமூகவிரோத சக்திகளை பணிநீக்கம் செய்யுங்கள்.
ஒத்தையடி ரோட்டுக்கு சுங்க கட்டணம் என்றபெயரில் கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள்.

முகநூலில் தோழர் பாலபாரதி

Related Images: