குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடே கொந்தளித்து லட்சக்கணக்கான பேர் போராடி நின்றபோது, வன்முறையா போகாதீர்கள் என்று ஏதோ , யாருக்கோ சொல்வது போல சொன்ன மகான் ரஜினி, கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறைகள் பற்றி வாய்கூட திறக்கவில்லை.
ஆனால் இன்னும் இவருக்கு சில பரிதாபமான அப்பாவிகள் முட்டாள்தனமான வெறியர்களாயிருப்பது ஆச்சரியம்.
அப்படி ஒரு அப்பாவி ரஜிகர் செய்த வேலை தான் இது. சேலத்தில் உள்ள மெய்யனூர் கிராமத்தில் ரஜினி படம் தர்பார் திரையிடப்பட உள்ளது. வரும் 9ஆம் தேதி திரையிடப்படும் நாளன்று அங்கே உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் என்கிற தியேட்டரின் முன் ஹெலிகாப்டர் மூலம் வானத்திலிருந்து பூவைக் கொட்டுவதற்கு கலெக்டரிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள்.
அவ்வளவு பூவை ஏதாவது சாமிக்குப் போட்டாலாவது சாமி நாலு வரம் தரும். இந்தச் சாமி இமயமலைக்கு எஸ்கேப்தானே ஆகும். தர்பார் என்றால் காட்டுத் தர்பார்தான் போலிருக்கிறது.