தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கடுமையாக விமர்சிக்கும் படமாக விஜய் சேதுபதியின் ‘லாபம்’படம் உருவாகி வருவதாக அதன் இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து அப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ‘குடி மக்களே’என்கிற கேப்சனுடன் வெளியான இதன் முதல்பார்வை அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் லாபம்.நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.மேலும் கலையரசன் சாய் தன்ஷிகா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அழுத்தமான கதைக்களத்தோடு பொழுதுபோக்கு அம்சங்களும் கலந்து உருவாகி வரும் லாபம் படத்தின் முதல்பார்வை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. உணவு அரசியலும் கலகல கமர்சியலும் சேர்ந்து உருவாகி வரும் இப்படத்தில் புரட்சிகரமான விசயங்களும் பேசப்பட்டுள்ளன.குறிப்பாக இப்படத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு முக்கிய காட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்படத்தை 7சி எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும் இணைந்து தயாரிக்கின்றன. இமான் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் முதல்பார்வையை வெளியிட்ட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன்,ஃல்“இங்கு சுட்டவர்களும் குடிமக்கள் தான். சுடப்பட்டவர்களும் குடிமக்கள் தான்” என்று ஒற்றைவரியில் படத்தின் கதைக்கருவை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். இதனால் இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Related Images: