நடிகை அமலாபாலை திரையுலகில் அளவுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுத்து அதோ அந்தப் பறவை போல’பறக்கவிட்ட அவரது தந்தை மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 61.
ஒன்றிரண்டு துண்டு துக்கடா படங்களில் நடித்துவிட்டு பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை அமலாபால். இப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. இப்படத்தை தொடந்து, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்தார்.அடுத்து அவரைக்காதலித்து கரம்பிடித்து அவசர அவசரமாக விவாகரத்தும் பெற்றுக்கொண்டார்.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ‘ஆடை’படத்துக்குப் பின்னர் தற்போது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். வரது அடுத்த படமான ‘அதோ அந்தப் பறவை போல’படத்தின் ஆடியோ வெளியீடு இரு தினங்களுக்கு முன்னர்தான் நடந்தது. இந்நிலையில், இவரது தந்தை பால் வர்கீஸ் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார்.இன்று மாலை இவரது இறுதி சடங்குகள் கேரளாவில் உள்ள குறுப்பம்படி என்னும் ஊரில் நடைபெற இருக்கிறது.