கடந்த வாரம் சென்னையில் தன்னார்வலர் மற்றும் வழக்கறிஞரான காயத்ரி காந்தவை முன்னெடுப்பில் பெசன்ட் நகரில் வீட்டு வாசல்களில் கோலம் போட்டு குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடியவர்களில் 8 பேரைக் கைது செய்து வழக்கு தொடர்ந்தது சென்னை காவல் துறை. அதைத் தொடர்ந்து திமுக மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளும் இப்போராட்டத்தை தமிழ்நாடெங்கும் ட்ரெண்டாக்கி விட, தமிழ்நாடெங்கும் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர் மக்கள்.
இந்நிலையில் காயத்ரி மேல் வழக்கு தொடர்ந்த காவல் துறை கண்காணிப்பாளர் விஸ்வநாதன் கூறுகையில், காய்த்ரி, பாகிஸ்தானைச் சேர்ந்த Bytes For All (B4A) என்கிற பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பில் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார். எனவே இந்த கோலப் போராட்டத்தின் பின்னே பாகிஸ்தானின் ‘கை’ இருக்குமோ என்கிற கோணத்தில் விசாரித்து வருகிறோம் என்று கூறினார்.
கமிஷனரின் இந்தப் பேச்சைக் கலாய்த்து ‘கோலம் போட்டவனெல்லாம் டெரரிஸ்டா’ என்று நெட்டிசன்கள் மீம்களும், கமெண்ட்டுகளும் போட்டுத் தள்ளிவிட்டனர்.
பத்திரிக்கையாளரும், ஆர்வலருமான சுபகுணராஜன் கமிஷனரின் இப்பேச்சை கண்டித்துள்ளார்.
“கனம் சென்னை போலீஸ் கமிஷனர் அவர்களுக்கு,
உங்களது சமீபத்திய பிரஸ் மீட் ( கோலம் டெரஸ்ரிசம் பற்றிய ) வீடியோ பார்த்தேன். அது தொடர்பில் இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
இந்தச் சங்கிகள் வேறு அடிக்கடி எங்களைப் போன்றவர்களை எடுத்ததற்கெல்லாம் ‘பாகிஸ்தானுக்கு போ’என்கிறார்கள்.
எனக்கு பாகிஸ்தானில் யாரையும் தெரியாது. எந்தவித தொடர்பும் கிடையாது. எழவு இந்தக் கிரிக்கெட் விளையாட்டு ‘அலர்ஜி’ எனபதால் இம்ரான், வாசிம், ஜாவேத் உட்பட ஒருத்தரையும் பிடிக்காது.
கூடுதலாக அமீத் ஷாவின் “இந்து ராஷ்ட்ரா “ வில் எங்களைப் போன்ற ‘ ஆன்டி இந்தியன்களுக்கு ‘ , இந்தியாவில் ‘குடியுரிமை ‘ சிக்கலும் வந்தாலும் வரலாம்.
எனவே ‘கோலம்’ காயத்ரி அவர்களிற்கு ஒரு ‘திரில்லிங்கான ‘ தீவிரமான பாகிஸ்தான் தொடர்பை ‘உருவாக்கித் தந்த ‘ சென்னை போலிஸ் கமிஷனர் எனக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தித் தர வேண்டுகிறேன்.
வேண்டுமானால் நானும் புரொபைல் படத்தில் I like Pakistan என்ற sticker ஐ வைத்து அவருக்கு உதவச் சம்மதமாய் உள்ளேன்.
செய்வீர்களா?
செய்வீர்களா?
நீங்கள் செய்வீர்களா?”
–முகநூலில் சுபகுணராஜன்.
காயத்ரிக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதாக கமிஷனர் கொடுத்த பேட்டி இணைப்பு கீழே..
https://www.facebook.com/100017295128793/videos/542563086330191/