ரஜினிகாந்த் ஓர் அபஸ்வரம், அபத்தம் மட்டுமல்ல, ரொம்ப ஆபத்தான மனிதர்….
நமது இளைஞர்களுக்கு சிகரெட் பிடிப்பது பெரிய ஸ்டைல் என்று சொல்லித்தந்தார்.
பெண்களை மட்டமாக நடத்த சொல்லித் தந்தார்.
சினிமாவில் மட்டும் பெரிய தியாகி மாதிரி நடிப்பவர், நிஜ வாழ்வில் பிளாக்
டிக்கெட், பிளாக் மனி என்று பல சட்ட விரோதமான செயல்களை தொடர்ந்து
செய்கிறார்.
இதுவே டூ மச் டேமேஜ்!
இது போதாதென்று இவர் சோவிற்கு கூஜா தூக்குகிறார்!
சோ யார்?
சென்னையில் மேடை நாடகம் போட்டவர். சினிமாவில் காமடியன், இரண்டிலுமே
மெட்ராஸ் பாஷையை கொச்சை படுத்தி பிழைப்பு நடத்தியவர். துக்ளக் எனும்
பெயரில் தமிழ் பத்திரிக்கை நடத்தியவர்: துக்ளக் என்பது உருது,
பத்திரிக்கையின் மொழி தமிழ், அடிக்கும் காபி 5000. படிப்பவர் எல்லோருமே
பிராமணர்கள்.
5000 காபி மட்டும் அச்சடிக்கும் பத்திரிக்கைக்கு
சொந்தக்காரர். பெரிய அறிவாளி, அரசியல் சாணக்கியர், கிங் மேக்கர்
என்றெல்லாம் புகழப்படும் மிஸ்டர் ராமசாமி, மிடாஸ் எனும் சாராய கம்பெனியின்
ஓனர்.
நல்ல குடும்பத்தில் பிறந்த பிராமணாள் சாராயம் விற்று
பிழைப்பாளோ? இப்படி சாராயம் விற்று தமிழர்களின் குடிக்கெடுக்கும் ஆசாமிக்கு
இந்த ரஜினிகாந்த் பெரிய புகழாரம் சூட்டுவது எதை குறிக்கிறது?
“தலைவா”
என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தமிழர்களின் காசில்
வாழ்ந்துக்கொண்டே, அதே தமிழருக்கு துரோகம் செய்யும் அவர் சங்கித்தனம் எதை
குறிக்கிறது?
பணத்திற்க்காக எதையும் செய்யும் ஒரு பரத்தை மனப்பான்மையை குறிக்கிறது…பரத்தை என்றால் பெண்கள் மட்டும் என்று நீங்கள் இது வரை நினைத்திருந்தால்….. ரஜினியை பாருங்கள், பரத்தன் என்பவரும் உண்டு!
இவர் சாயம் இப்போது வெளுத்ததும் நன்மைக்கே. இல்லாவிட்டால் இவரை எலக்ஷனில் நிற்கவைத்து, இ வி எம் களை ஹாக் செய்து, “ரஜினி தன் ரசுகர்களின் பலத்தால் ஜெயித்தார்” என்று நம்மை ஏமாற்றுவார்கள். நாமும் “ரஜினியின் சூப்பர் ஸ்டார்டத்துல அது சாத்தியம் தானே?!” என்று benefit of doubtடை ரஜினிக்கு தருவோம். அவர் எந்த மெனக்கெடலுமே இல்லாமல் நேரடியாக முதல் அமைச்சர் ஆகும் அபாயம் உண்டாகும். அவர் பொம்மை முதலமைச்சராய் இருக்க, பாசிச ஆர் எஸ் எஸ் தன் கொடூர வேலையை தமிழகத்திலும் நிகழ்த்தும்….
கல் தோன்றி மண் தோன்றா காலம் முதல் நாம் கட்டிக்காத்த பண்பாடும் தமிழ் வரலாறும், ஏன் மீம்களும் காவிமயமாகும் பேராபத்து ஏற்படும்.
ரஜினி ஒரு நச்சு. அவர் நம்மிடையே பரவுவது நமக்கு பேராபத்து. பொது மக்களின் நிம்மதியான இருத்தலும், நம் பிள்ளைகளின் கல்வியும் கேள்விக்குள்ளாகும் இந்த நெருக்கடியான சூழலில் எவ்வளவு வக்கிரமாய் இந்தாளு நம்மை திசை திருப்ப பார்க்கிறார்?!!
What a cheap character!!
#ரஜினிஒழிக
– Dr. Shalini.
-முகநூலில் டாக்டர் ஷாலினி