ஐந்து படியில் அகதி சிறை
1⃣ NPR – National Population Register மக்கள் தொகை சென்சஸ் கணக்கெடுப்புடன் (census) நைசாக இணைந்து கூடுதலாக எடுக்கப்படும் விவரங்கள்
▶ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கணக்கெடுப்பு துவங்கும்
▶கணக்கெடுப்பவர் வழக்கமான சென்சஸ் கேள்விகளான வீட்டில் யார் யார் , என்ன வயது, உறவுமுறை , வருமானம் போன்றவை பற்றி எளிமையான கேள்விகள் கேட்பார்.
▶உங்கள் பெயர்? குடும்ப உறுப்பினர்கள் விவரம்? எண்ணிக்கை? இவை தவிர NPRக்காக நீங்கள் பிறந்த ஊர்? உங்கள் பெற்றோர் பிறந்த ஊர்? ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை விவரம் போன்ற எளிய கேள்விகள் மட்டும்.
2⃣ NPR கேள்விகளின் முடிவில் “D”என்ற குறியீடு
NPRல் சேகரிக்கப்பட்ட விவரங்களில் பிறந்த இடம், குடிமகனா எனபது பற்றி ஏதேனும் ஆவண பிழையோ அல்லது சரியான விவரம் அளிக்க முடியாத குடும்ப நபர்களின் பெயருக்கு பின்னால் D அதாவது doubt full (சந்தேகத்திற்கு உரியவர்) என்ற அடையாளம் இடப்படும் (ஆதாரில் எழுத்துப்பிழை ஓட்டர் ஐடியில் பிழை பெற்றோர் பிறந்த ஊர் தகவல் தெரிவிக்க முடியாதவர்கள் இதுபோன்ற காரணங்களால்)
D யாருக்கு குறிக்கப்படுகிறது என்பது நமக்கு தெரியப்படுத்தப்படாது. தகப்பனை விடுத்து மகனுக்கோ மகனை விடுத்து தகப்பனுக்கோ அல்லது தாய் மகளுக்கோ D குறிக்கப்படலாம்.
குறிப்பு – இந்து முஸ்லிம் கிருஸ்தவர் என யாருக்கு வேண்டுமானாலும் இந்த D குறியீடு செய்யப்படலாம்.
அடுத்து வருவது NRC
3⃣ NRC – National Register of Citizens (தேசிய மக்கள் தொகை பதிவேடு)
▶NPR முடிவில் யாருக்கெல்லாம் D
குறியிடப்பட்டதோ அவர்களுக்கு சில மாதங்களில் ஒரு கடிதம் வரும்.
▶அதில் நீங்கள் இந்திய குடிமகன் என்பதை நிருபிக்க ஆவணத்துடன் வரவும் என்றிருக்கும்.
▶இங்கே உங்கள் ஆதார் அட்டையோ, ஓட்டர் ஐடியோ, ரேசன் அட்டையோ எதுவும் செல்லவே செல்லாது!
▶இங்கே நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியது உங்கள் பிறப்புச் சான்றிதழ் அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் வாக்களிக்க பயன்படுத்திய வாக்காளர் அடையாள அட்டை அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வரும் சொத்து பத்திரம் அதுவும் சம்பந்தப்பட்ட நபர் பெயரில் இருத்தல் வேண்டும்.
▶இதிலும் தங்கள் குடியுரிமையை நிருபிக்க முடியாதவர்கள் அடுத்த நிலைக்கு தள்ளப்படுவார்கள்
4⃣ Foreigners tribunal வெளிநாட்டவர் தீர்ப்பாயம்
▶ இங்கே இறுதி வாய்ப்பு தரப்படுகிறது
▶நீங்கள் அயல்நாட்டை சேர்ந்தவரா இல்லையா என்பதை நிருபிக்க வேண்டும், (அதாவது NRC யால் நீங்கள் இந்திய குடியுரிமை இழந்துவிட்ட நிலை ஏற்பட்டுவிட்டது)
▶ CAA Citizenship*Amendment)Act
2019 (இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019)
▶அதாவது பரம்பரை பரம்பரையாக இந்தியாவிலேயே பிறந்து வாழ்ந்து வந்தவரானாலும் மேலே சொன்ன படிகளின் படி தங்கள் குடியுரிமையை நிருபிக்க முடியாத (முஸ்லிம்களை தவிற) பிற மதத்தினர் தாங்கள் இந்தியர் என்று நிருபிக்க முடியாததால், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற ஏதேனும் ஒரு நாட்டில் இருந்து அகதியாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக அறிவிக்க வேண்டும். அதற்கான சான்றை இந்த தீர்ப்பாயத்திடம் பெற வேண்டும் (ஒரு இந்திய குடிமகனின் நிலை)
5⃣ detention camp அகதிகள் சிறைச்சாலை
🛑 மேலே சொன்ன எந்த விதத்திலும் (இந்தியனாக இருந்தும்) இந்தியன்தான் என்று நிருபிக்க முடியாத பலகோடி மக்கள் இந்த சிறையில் தள்ளப்படுவார்கள்.
🛑 NPR NRC CAA சட்டங்கள் ஏதோ முஸ்லிம் மக்களுக்கான சட்டம் தான் என்று கருதிவிடாதீர்கள். இந்த சட்டங்கள் மூலம் அசாம் மாநிலத்தில் மட்டும் 15 லட்சம் இந்து மக்கள் தங்கள் குடியுரிமையை இழந்து தவித்து வருகிறார்கள்.
ஆர்எஸ்எஸ் ன் இந்து ராஷ்டிரத்தை நிறுவ இப்படி மற்ற மதத்தவரை அகதியாக்கி வெளித்தள்ளும் முயற்சி இது.
இவ்வாறு இந்திய தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க சதி செய்பவர்களின் சூழ்ச்சியை ஒன்றிணைந்து முறியடிப்போம்
படித்ததைப் பகிர்ந்துள்ளேன்…