இந்த பட்ஜெட்டில் இந்திய ரயில்வே தமிழ்நாட்டில் பத்து ரயில் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக பார்லிமெண்ட்டில் அறிவித்தார் ரயில்வே அமைச்சர்.
தமிழ்நாட்டில் தென்னக ரயில்வேயால் செயல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டங்களின் மொத்த மதிப்பு 12 ஆயிரம் கோடி ரூபாய். வாவ் . சூப்பர்.
சரி. இதற்கு முதல் கட்டமாக இந்த பட்ஜெட்டில் எவ்வளவு பணம் ஒதுக்கியிருக்கிறார்கள் தெரியுமா ?
பத்தாயிரம் ரூபாய். ஆம். வெறும் பத்தாயிரம் ரூபாய் தான்.
ஒரு திட்டத்துக்கு ஆயிரம் வீதம் பத்து திட்டங்களுக்கு பத்தாயிரம் ரூபாய். மொய்ப் பணம்.
பாஜக அரசின் இந்த ஏமாற்று வேலையை இடதுசாரி கட்சி எம்.பி. வெங்கடேசன் அவர்கள் தான் வெளிக்கொண்டு வந்துள்ளார். பொரி உருண்டையார் அல்ல.
இதே பட்ஜெட்டில் வட இந்திய ரயில்வேயின் ரயில்வே திட்டங்களுக்கு உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய்ஒதுக்கியுள்ளது இந்த மார்வாடி மத்திய அரசு.
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் அவர்களின் பேட்டி கீழே..