உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக வந்த செய்திக்கு காமெடி நடிகர் விளக்கம் அளித்துள்ளார்.
காமெடி நடிகர் வடிவேலுடன் இணைந்து நடித்தவர் போண்டா மணி. நடிகனாக ஆக வேண்டும் என்று இலங்கையில் இருந்து அகதியாக ராமேஸ்வரம் வந்தவர். இவர் இதுவரை 190-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவருடைய உண்மையான பெயர் கேதீஸ்வரன்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சென்னையில் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று முதல் செய்தி பரவியது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தவறான தகவலை பரப்பியுள்ளனர். இது முற்றிலும் வதந்தி. நான் நலமாக உள்ளேன். படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடித்து வருகிறேன். என்னைப் பற்றி தவறாக வரும் பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.