8

குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று சில தினங்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு மத்தியில் கூவிய ரஜினியை பொதுமக்கள் வலைவீசித் தேடி வருகின்றனர்.

குடியுரிமைத்திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையினர் திடீரென தடியடி நடத்தினர்.

இந்த தடியடி தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் மீது நடத்திய அராஜக தாக்குதலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க கூட்டணிக் கட்சியினர் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, “இஸ்லாமியர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் ஆளாக நான் நிற்பேன் என சொன்னது நீ தான, சொல்? எங்க rajinikanth sir ஆள காணோம். Gate அ திறந்த உங்க வாழ்க்கையை ஆரம்பித்த தமிழகம், அதே gate அ மூடி, முடித்து வைக்கவும் தயங்காது” எனத் தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், இந்த சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால், முதல் ஆளாக தான் களத்தில் இறங்கி போராடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். அதனையடுத்து தற்போது இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ரஜினி இதற்காக எதிராகப் போராடுவாரா? எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.மேலும் , #போராடவாயாரஜினிதாத்தா #வீதிக்குவாங்கரஜினி ஆகிய குறிச்சொற்கள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.