பிரபல நடிகர்களின் படங்களில் ஒரு காட்சியிலாவது தலையைக்காட்டிவிடமாட்டோமா என்று பலரும் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், விஜயின் மாஸ்டர் படத்தில் நடிக்கக்கிடைத்த மாபெரும் வாய்ப்பை நிராகரித்திருக்கிறார் விஜய் டி.வி பிரபலம் புகழ்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ‘புகழ்’.அவரது வசன உச்சரிப்பு மட்டுமில்லாமல், உடலசைவுகளின் மூலம் பார்வையாளர்களைச் சிரிக்க வைத்து வருகிறார். சாதாரண கூலித் தொழிலாளியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய புகழ், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலமும் கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலமும் புகழின் உச்சத்துக்கு சென்றிருக்கிறார்.

இந்நிலையில், விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நடிப்பதற்காக 40 நாட்கள் தேதி கேட்டு படக்குழு குக் வித் கோமாளி ‘புகழ்’-ஐ அணுகியுள்ளனர். ஆனால், மாஸ்டர் படத்தில் நடிக்க புகழ் மறுத்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியுள்ள புகழ்,…விஜய் உடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு.ஆனால், மக்கள் முன்னிலையில் இந்த அளவுக்கு நான் பிரபலமானதற்குக் காரணமாக இருந்த விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து பாதியில் போக விரும்பவில்லை. அதனாலேயே மாஸ்டர் படத்துக்கு நாட்கள் ஒதுக்க முடியவில்லை.

மேலும், அந்தப் படத்தில் நடிக்க முடியை வெட்ட வேண்டும் என்றும் சொல்லி இருந்தார்கள். அப்படி முடியை வெட்டிவிட்டால், திடீரென சூட்டிங் ஸ்பாட்டில் என்னை அடையாளம் தெரியாத அசிஸ்டெண்ட் டைரக்டர் யாராவது என்னை ’பின்னால் போய் நில்’ என்று சொல்லிவிட்டால், என் முகம் மக்களுக்குத் தெரியாமலே போய்விடும் வாய்ப்பும் இருந்தது. அதனால், கனத்த மனதுடன் அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன்.லோகேஷ் கனகராஜின் கைதி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்திருந்தேன். அதில் என் முகம் தெரியாது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தை உடனே விட்டுக்கொடுக்க மனமில்லை என்று புகழ் கூறியிருக்கிறார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.