;

‘ஒரு விஷயம் லேசுல கெடச்சிட்டா, அதோட மதிப்பு புரியாது’, இந்த லைன் வெச்சி ஒரு Feel Good படத்தை, GVM ஸ்டைல்ல, GVM’மை Cameo பண்ணவெச்சி, GVM Action-Cut சொன்ன மாதிரியே ஜீவிச்சி எடுத்திருக்காங்க.

‘Bruce Almighty’ தோனில, கடவுளான விஜய்சேதுபதி, ஹீரோக்கு அவர் வாழ்க்கைல பண்ண தப்பையெல்லாம் திருத்தக்க இரண்டாவது வாய்ப்பு குடுக்குறாரு with Conditions Applied.

இப்ப, ஹீரோவுக்கு வரம் கிடைக்குறதுக்கு முன்னாடி முதல்பாதி, வரம் கிடைச்ச பின்னாடி இரண்டாம்பாதி. முக்கியமான விஷயங்கள் Direct narration’ல இரண்டாம்பாதில வர்றதுனால, முதல்பாதியை சுவாரசியமாக்க, எடிட்டிங்ல கொஞ்சம் Non-Linear’ஆ விளையாடி இருக்காங்க, அது ரொம்ப சரியா உக்காந்து இருக்கு, Boopathi Selvaraj’ஜோட Creative Input பாராட்டத்தக்கது.

Straight Fwd காட்சியமைப்புகள், அதுக்கேத்த அடிப்படை ஒளிப்பதிவு தந்திரங்கள்ன்னு, #விதுஅய்யன்’வின் கோணங்கள் இனிமை. ஆனா, நிறைய படம் பாக்குறவங்க, இவர் வெச்சிருக்க Angle’ல வெச்சே அடுதடுத்த நிகழ்வுகளை கணிக்க முடியுறது சறுக்கல். பாடல்கள்லயும், BGM’லயும் GVM நெடி அதிகம், அதையும் மீறி ‘கதைப்போமா’ பாடல் போன்ற சில இடங்களில் எட்டிப்பாக்குறாரு #லியோன்ஜேம்ஸ். Sound design & Mixing நன்று. CG சொதப்பல்.

‘தன்னோட பிரட்சனையை தானே face பண்றவன் தான் ஹீரோ’ போன்ற வசனங்கள் கைதட்டல்களை அள்ளுது. நிறைய இடங்கள்ல காமெடி நல்லாவே ஒர்கவுட் ஆகி இருக்கு. தெய்வாதிசியமா #Shahra எந்த இடத்துலயும் அதீதமா போகாம மீட்டர்ல நடிச்சி இருக்காரு, பிரம்மிப்பு. படத்துல 2தேவதைகள், #ரித்திகாசிங் வசன உச்சரிப்புல பிசுறு தட்டினாலும் வழக்கம்போல ரியாக்ஷன்ல ஸ்கோர் பண்ணுறாங்க. #வாணிபோஜனை வித்யாசமா காமிக்க முற்பட்டு பிற்பாதில மொக்கை பண்ணிட்டாங்க, மேக்கபே இல்லைனாலும் வாணி ரொம்ப நைஸுங்க 🙂

MSபாஸ்கர் நடிப்ப கொட்டவே வழக்கம்போல ஒரு சீன் வருது, வழக்கம்போல செஞ்சுரி அடிக்கிறாரு, ஆனா அந்த ஒட்டு தாடி தான், இவர Group’ல டூப் ஆக்கிடுது. #அசோக்செல்வன், Effortless நடிப்பை வெளிப்படுத்துறதுல கில்லாடி. அவர் Zone’ல வர காட்சிகள்ல சிக்ஸர் அடிக்கிறார், ஆனா அதையும் மீறி ரொம்ப நடிக்க முயற்சி பண்ணும்போது செயற்கை யா தெரியுது, சில நேரத்துல பிற நடிகர்களையும் நியாபகப்படுத்துறார், இருந்தாலும் interval Act அசத்தல்👌. #விஜய்சேதுபதி & #ரமேஷ்திலக்’கோட combo அட்டகாசம்.

*கிருஷ்ணா கதாபாத்திரம் சென்னைல எதுக்கு கால்டாக்ஸி ஓட்டணும்?
*2 நாள்ல எப்படி முழு கேரளாவையும் சுத்திட்டு சென்னை வர முடியுமா?

மாதிரியான லாஜிக் கேள்விகள் எழுந்தாலும், Fantasy படம்’ங்குறதால அதை பெருசா கண்டுக்க மணமில்லை. அதேநேரம், ஒட்டுமொத்த திரைக்கதையையும் குறியீடு’ங்குற பேருல முதல்லயே சொல்லிடுறதெல்லாம், திரைக்கதையோட Excitement’அ குறைக்குது. சமயத்துல ‘இது GVM Spoofஓ’ன்னு நினைக்குற அளவுக்கு வர GVM reference, இயக்குனரோட originalityயையும், படத்தோட நம்பகத்தன்மையையும் சந்தேகிக்க வைக்குது.

இத்தனை குறைகளையும் மீறி, முக்கியமான சில இடங்கள்ல கதை 2 timeline’ல நடக்குற மாதிரி வந்தாலும் அதை கொஞ்சம் கூட குழப்பமில்லாம சொன்ன விதத்துக்காகவே #இயக்குனர்அஸ்வத்தை பாராட்டலாம். ரொம்ப மெல்லிதான கதையை, ரொம்பவும் மென்மையா சொல்லி இருக்காரு, இருந்தும் படமாக்கள்ல கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் மெருகேறி இருக்கும்.முதல் காட்சிலையே, கிளைமாக்ஸ் வரைக்கும் கணிக்க முடிஞ்சாலும், கடைசிவரைக்கும் புன்சிரிப்போடவே பாக்கவெக்குற வெகு சில படங்கள்ல இதுவும் ஒன்னு. Feel Good பட விரும்பிகள் தவறவிடக்கூடாத படம்.wc.

முகநூலில் Santhosh Av Kamalraj

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.