இத்தாலியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கும் இந்நிலையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக் கொள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த 34 வயது நர்ஸ் டேனியல்லா ட்ரெஸ்ஸீ என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.

இத்தாலியில் மான்ஸா நகரத்தில் உள்ள சேன் ஜெரார்டோ மருத்துவமனையில் அவசரப் பிரிவில் கொரோனா நோயாளிகளை கவனித்து வந்துள்ளார் நர்ஸ் டேனியல்லா.

கடும் பணிச்சுமையிலும், தூங்காமல் ஓய்வெடுக்காமல் பணியில் ஈடுபட்டு வந்துள்ள அவருக்கு கடந்த 10 ஆம் தேதி காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளது. உடனே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரது ரத்த மாதிரியை பரிசோதித்த போது அவருக்கு கொரோனா தெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைக் கேள்விப் பட்டதும் நோய்த் தொற்றோடு இவ்வளவு நாள் பணியாற்றிய நான் எத்தனையோ பேருக்கு கொரோனாவை பரப்பிவிட்டேனே என்கிற வருத்தம் மேலோங்க அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இத்தாலிய செவிலியர் சங்கம் இது பற்றிய இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

https://nypost.com/2020/03/25/italian-nurse-with-coronavirus-kills-herself-amid-fears-of-infecting-others/?utm_medium=SocialFlow&sr_share=facebook&utm_source=NYPFacebook&utm_campaign=SocialFlow&fbclid=IwAR2Yek32Gzhr-bTUC1Vc0dIFrhh2jZ4Uo0E09_HZIorQV04x_1RAVG_-ibE&fbclid=IwAR28rfSb5baVn5FvZWww_HKv2iFm8VPOI7WC56aqwQIQlDkWqbOIvJGnrQo

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.