ஏன் விடுமுறை அளித்து கடையடைப்பு செய்து,பயணங்களை தவிர்த்து மக்களை வீட்டிலேயே இருக்க அரசு அறிவுறுத்துகிறது?..

இல்லை சார்.. அது தேவையேயில்லை..

ஏன் இவ்வளவு பதட்டம்?

இந்தியாவில் இதுவரை 100 கொரானா நோயாளிகள்தானே கண்டறியப்பட்டிருக்கின்றனர்..

இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

என்றெல்லாம் நினைக்காதிருங்கள்..

ஒவ்வொரு தேசத்திலும் 20 நாட்கள் இடைவெளியில் அது எவ்வளவு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள்..

இத்தாலியில் பிப்ரவரி 20 தேதியில் 4 தொற்றுகள் தான் இருந்தன..ஆனால் மார்ச் 10 ஆம் தேதி 10,149 ஆக மாறியிருக்கிறது..

ஈரானில் பிப்ரவரி 20 ஆம் தேதி வெறும் 5 தொற்றுகள் தான் இருந்தன…. ஆனால் மார்ச் 10 ஆம் தேதி அது 8042ஆக மாறி இருந்தது..

தென் கொரியாவில் பிப்ரவரி 20 ஆம் தேதி வெறும் 111 இல் இருந்து, மார்ச் 10ஆம் தேதி 7513 ஆக மாறி இருந்தது..

ஸ்பெயினில் பிப்ரவரி 20ஆம் தேதி வெறும் இரண்டு தொற்றுகள் இருந்தன.

மார்ச் 10 ஆம் தேதி 1695 ஆக உயர்ந்து இருக்கிறது..

ப்ரான்சில் பிப்.20ம் தேதி 12 ஆக இருந்தது. மார்ச் 10இல் 1784 ஆக உயர்ந்தது.

ஜெர்மனியில் பிப்20இல் 16 ஆக இருந்தது.. மார்ச்10இல் 1565 ஆக உயர்ந்தது.

அமெரிக்காவில் 15 ஆக இருந்தது 994 ஆக உயர்ந்தது

பிரிட்டனில் 9 ஆக இருந்தது 383 ஆக உயர்ந்தது

சீனா தவிர்த்த மொத்த உலகத்தில் பிப்ரவரி 20 அன்று வெறும் 1212 தொற்றுகள் என்ற நிலையில் இருந்து மார்ச் 10ஆம் தேதி 38179 ஆக உயர்ந்தது.

இது முப்பது மடங்கு பாய்ச்சலாகும்.

இந்த புள்ளி விபரங்கள்தான் நமக்கான அலாரம்

இந்தியாவில் முதலில் ஒன்று என்ற எண்ணிக்கையில் துவங்கிய கணக்கு ஒருசில நாளில் நூறைத் தொட்டிருக்கிறது..

இப்பொழுதுதான் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்..

பலரும் நினைக்கின்றார்கள்.. தமிழகத்தில் வெப்பநிலை அதிகம்.. இங்கு கொரானா பரவாது என்று..

இதைவிட அதிக வெப்பப் பிரதேசங்களில் கொரோனா அதிகப் பாய்ச்சல் பாய்ந்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்..

இந்த நோயின் அறிகுறிகள் 14 நாட்களில் வெளிப்படுகிறது..

எனவேதான் 15 நாட்கள் ஒவ்வொரு தேசமும் முழு Shut down யைக் கொண்டு வருகிறது..

காரணம்..

இது தொற்று நோய்.. ஒருவரிடத்திலிருந்து இன்னொருவருக்குப் பரவாமல் தடுக்க வேண்டும்..

அதுதான் மிக முக்கியம்..

எல்லோரையும் ஒரு 15 தினங்கள் வீட்டில் ஒட்டு மொத்தமாக முடக்கி வைத்தால்.. ஒருவரிடம் இருந்து இன்னொரு வெளி நபருக்குப் பரவாது..

ஒரு வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நபர்களில் யாருக்கேனும் கொரானோ பாதிப்பு இருக்கும் என்றால், 14 நாட்களுக்குள் அதன் அறிகுறி வெளிப்பட்டு விடும்..

அவர்களை மட்டும் அடையாளம் கண்டு கொள்வதோ.. அவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதோ ஒரு அரசிற்கு மிகவும் எளிது..

ஆரம்ப நிலையில்.. நோயாளிகள் முழுஓய்வில் இருந்து, சாதாரண தடுப்பு மாத்திரைகள் (Antibiotic) எடுத்துக் கொள்வதுவும்.. சத்துள்ள ஆகாரத்தை எடுத்துக் கொள்வதுமே இந்தநோயைக் குணப்படுத்தப் போதுமானது..

அடுத்தடுத்த நிலைக்கு நோய் போகும் பொழுதுதான்.. அடுத்தடுத்த சிகிச்சை தேவைப்படும்..

சுவாசக் கோளாறுகள் அல்லது சுவாசத் திணறல் வரும் பொழுதுதான் அவசரச் சிகிச்சை உதவிகள் தேவைப்படும்..

அவர்களிலும்.. முதியோர்கள்.. நீரிழிவு நோயாளிகள் .. உயர் ரத்த அழுத்த நோயாளிகள்.. கர்ப்பிணிகள் ஆகியோர்களைத்தான் அதிகம் பாதிக்கும் என்பதால்.. அவர்கள் அதிகக் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்..

அவ்வளவே..

பயப்பட வேண்டியதில்லை..இந்த விழிப்புணர்வு ஜனங்களிடத்திலே இருக்க வேண்டும்..

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் தலையாயக் கடமை..

தேவையற்ற.. உறுதிப்படுத்தப்படுத்தப்படாத .. எந்தத் தகவலையும், வதந்திகளையும் பரப்பாமலிருக்க வேண்டும்..

அனைவருக்கும் பகிரவும்…அரசின் ஒவ்வொரு பாதுகாப்பு நடவடிக்கையிலும் நம் ஒத்துழைப்பு மிக..மிக அவசியம்..

அதற்காக மோடி கைதட்டி கொரோனாவை ஓட்டிவிட்டார் என்று சங்கிப் பாட்டு பாடுபவர்களையும் நம்பிவிடாதீர்கள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.