வரும் ஏப்ரல் 21 வரை கட்டாயமாக்கப்பட்ட ‘work from home’ கலாசாரத்தால் பல கனவான்களின் நெடுங்கால அலப்பறைகள் அம்பலமாகும் ஆபத்துகள் அதிகமாகியிருக்கின்றன.
இது குறித்து தன் கணவன் மீது ஒரு வீட்டம்மணியின் எரிச்சலான நெடும் புகார்.
“நச்சரிச்சு.. நச்சரிச்சு..காலைல இருந்து மூணு நாலு காஃபி குடிச்சாச்சு. கால் கிலோ காராச்சேவை மொக்கியாச்சு..
ரெண்டு மூணு தடவை போன்ல.. ‘நாம நம்ம கடமையைத்தானே செய்யறோம்’ சிபிஐ ஆபிசர் வடிவேலு போல.. ஓகே.. சார்.. it will be done’-ன்னு பந்தாவா பேசியாச்சு..
வெப்சீரிஸ்ல இதுவரைக்கு அஞ்சு எபிஸோட் ஓடிடுச்சு.. ஃபேஸ்புக்.. வாட்சப்ல நிமிஷத்துக்கொரு தடவை எட்டிப் பார்த்துக்கிட்டே இருக்கிறது வேற..
இந்த லட்சணத்துல.. ‘டோன்ட் டிஸ்டர்ப்.. ஐ அம் ஆன் ஆஃபிஸ் கால்னு’ பசங்க கிட்ட எரிஞ்சு விழறது.. கதவை மூடிட்டு ரெண்டு மூணு குட்டித் தூக்கம் வேற..
ஆக.. இத்தனை வருஷம் ஆஃபிஸ்ல இதே மாதிரி குப்பை கொட்டிட்டு வீட்டுக்கு வந்தவுடனே.. ‘ஆஃபிஸ்ல நான் நாய் மாதிரி உழைக்கறேன்.. அந்தக் கஷ்டம் உங்களுக்கு ஏதாவது தெரியுதா’…ன்னு எங்க கிட்ட அப்பப்ப சீன் போடறது..
இப்பத்தானே எல்லாம் புரியுது”
பேசாம நீ ஆபிசுக்கே போயிறு சிவாஜி🙏🏻
–வாட்சப் அலப்பரை.