எப்போதுமே பத்திரிகையாளர்களை பிச்சைக்காரர்களை விட கேவலமாக நடத்தி தனது கேட் வாசலில் கூவி விட்டுச் செல்லும் ரஜினி இம்முறை லீலா பேலஸ் என்கிற ஏழு நட்சத்திர ஓட்டலில் வைத்து அவமானப்படுத்தினார். மைக்கைப்பிடித்து சகட்டுமேனிக்கு உளறிக்கொட்டிய அவர், பேச்சு முடிந்ததும் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாமல் வேகமாக நடையைக் கட்டினார். ஆனாலும் நம்ம ஆட்கள் இன்னும் ஒரு மாத காலத்துக்காவது இந்த சோப்ளாங்கி ஸ்டாரின் அரசியல் எண்ட்ரி குறித்து தான் மயிர்பிளக்க விவாதம் நடத்துவார்கள்.
ரஜினியின் இன்றைய பிரஸ்மீட் குறித்து முக நூலில் வந்த சில க்மெண்டுகள்…
எழுச்சி ஏற்பட்டதும் வருவேன். அதுவரை நன்றாக கை கழுவவும். மூக்கை பொத்தி தும்மவும்.
- நடுநிலை குமார்.
தலைவன் சொன்னதை கேக்கறவன் தான் தொண்டன். தொண்டன் சொல்றதை கேக்கறவன் தலைவன் இல்லை..
ப்பேரறிஞர் கபாலி
பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி கேட்ககூடாதுன்னு சொல்லிட்டு கெளம்பிட்டார் !! The End !!

ஆரம்பிக்கறதுக்குள்ளயே முடிச்சி உட்டாப்ல… பாபால தயிர்ச்சட்டி தலை தாத்தாக்கு போட்ட ஸ்கிரிப்டுனு நினைச்சா இது அருணாச்சலத்துல ஜனகராஜுக்கு எழுதுன ஸ்கிரிப்டா இருக்கு… பாவம் ரசிகனுக எவனையும் உள்ள விடலயா.. கைதட்ட கூட ஆளக்காணல 😆
நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை… கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் – ரஜினி அறிவிப்பால் தொண்டர்கள் ஷாக்!
“நல்ல, நேர்மையான,புதிய சிந்தனைகள், தன்மானம் உள்ள ஒரு இளைஞனை முதல்வராக்க விரும்புகிறேன்! ” – ரஜினி.
அப்ப நீ?
பொறம்போக்குங்க,
“நான் தான் தர்பாரிலேயே சொல்லிட்டேனே நிஜத்துல நான் வில்லன் என்று! “…
செய்தியாளர் சந்திப்பு என்ற பெயரில் ஒரு பிரசங்கம் நடந்தேறியிருக்கிறது.செய்தியாளர்கள் மயிரளவும் மதிக்கப்பட மாட்டார்கள் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.

ஆனாலும் இது குறித்து இரண்டு நாட்களுக்கு மயிர்பிளக்கும் விவாதங்களை நடத்தாமல் ஊடகங்கள் விடப்போவதில்லை. ஏனென்றால் டிசைன் அப்படி!
தமிழ்நாட்டில் புரட்சி வேண்டும்.
அது பத்திரிக்கையாளர்கள் கைகளில் இருக்கிறது..
அந்தப் புரட்சிக்கு நீங்க மக்களை நேரில் சந்தித்து அந்த புரட்சி பற்றி விளக்க மாட்டிங்களா சார்??.
எனக்கு சன் பிக்சர்ஸ் படம் இருக்கு..
வர்ட்டடா….
யோவ் போயா யோவ் ரஜினி…
விட்டா எல்லாரும் வந்து எனக்கு ஓட்டு போடுவேன்னு பத்தரம் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தா தான் அரசியலுக்கு வருவேன்னு சொல்லுவ போல…
இன்னிக்கும் அல்வாதான்..!
மக்களிடையே எழுச்சி வரணுமாம்.. புரட்சி பொங்கணுமாம்.. இளைஞர்கள் ஆர்வத்துடன் எழணுமாம்.. இப்போதைய ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பணுமாம்.
அந்த நேரத்திலதான்… நம்ம அண்ணாத்த அரசியலுக்குள்ள வருவாராம்..
யோவ்.. இவ்ளோ நேரம் அவர் பேசினது எல்லாமே கட்சி மீட்டிங்ல பேச வேண்டியதுய்யா.. பத்திரிகையாளர் மீட்டிங்ல வந்து பேசியிருக்காரு..!
உஷ்.. அப்பா.. இன்னும் எத்தனை ரப்சரை நாம சந்திக்கணுமோ.. தெரியலையே..!
இந்தக் கொடுமையையெல்லாம் பார்த்துக்கிட்டேயிருக்கும் வாக்காளர்கள் அடுத்தத் தேர்தல்ல “நீங்க வரவே வேணாம் ராசா.. போய் உங்க வேலையைப் பாருங்க. நாங்க எங்க தலையெழுத்த பார்த்துக்குறோம்”ன்னு சொல்லிட்டு வழக்கம்போல துட்டை வாங்கிட்டு இப்போதைய திருடர்களுக்கே ஓட்டைப் போட்டுட்டுப் போகப் போறாங்க..
இதுதான் நடக்கப் போவுது..!