இப்போது வந்து உள்ள (கொரோனா) போல காலரா,அம்மை நோய்கள் போன்ற நோய்கள் நம் கிராமத்தில் வந்து ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இறக்க நேரிட்டால், நம் முன்னோர்கள், “தெய்வ குற்றம்’ ஏற்ப்பட்டுவிட்டது என்று உடனே கோயில் திருவிழா ஏற்பாடு செய்து “காப்பு” கட்டி விடுவார்கள்
கிராமத்தில் நான்கு திசைகளிலும் நான்கு அம்மனுக்கு சிலைகள் வைத்து வேப்ப மரத்தை எல்லை காக்கும் எல்லையம்மனாக கருதி வழிப்பட்டனர்
அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழா வைப்பார்கள்
இதனால் இந்த ஊர் மக்கள் வெளியூர் செல்ல மாட்டார்கள். இதனால் நோய் பரவாமல் தடுக்கப்படும்
மேலும் வீதியெங்கும் வேப்பிலை தோரணமும்
வீட்டு வாசலில் வேப்பிலை,மாவிலை கொத்து சொருகி வைப்பதுடன், மாட்டுச் சாணம் தெளித்து மாவு அரிசி கோலம் போட்டு செம்மண் கரைத்து கோலத்தைச் சுற்றி வட்டமிடுவார்கள்
இவை அனைத்தும் கிருமி நாசினிகள், கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கக்கூடியது
மேலும், விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சளை அரைத்து தண்ணீரில் கலந்து பருத்தி ஆடைகளை அதில் முக்கி உலரவைத்து அணிவார்கள்
பருத்தி ஆடையில் மஞ்சளை தடவி அணிந்தால் கிருமிகள் நம் உடலை அண்டாது
அரைத்த மஞ்சள் தண்ணீரை வீட்டிலும் வாசலிலும் தெளிப்பார்கள். இது வீட்டில் உள்ள விஷக்கிருமிகளை அழிக்க வல்லது. மஞ்சள், வேப்பிலை, மாவிலை போன்றவை கிருமிநாசினி என்று அறிவியல்பூர்வமாகவும் நிரூபித்துள்ளனர்.
இவை போன்ற கிருமி நாசினிகளை நோய் பரவும் இவ்வேளையில் வீட்டில் எளிய முறையில் உபயோகப் படுத்தி நோய்த் தடுப்பு செய்யுங்கள்.
ஆனால் அதற்காக மகாராஷ்டிராவில் இந்து மகா சபை சங்கிகள் சொல்வது போல் கோமியம் குடித்தால் வைரஸ் போய்விடும் என்று மூடநம்பிக்கை கொள்ளும் லெவலுக்குப் போய்விடாதீர்கள்.
மஹாரஷ்டிராவில் மேடையில் உட்கார்ந்தபடி கோமியம் குடித்தால் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம் என்று சொன்ன இந்து மகா சபையினரை பார்வையாளர்கள் சிலர் கோமியத்தை நீங்கள் குடித்துக் காண்பியுங்கள் என்று ஆர்வம் மிகுதியில் கேட்க அதிர்ச்சியானவர்கள் சைலன்ட்டாக எஸ்கேப்.