Mandatory Credit: Photo by MANUEL DE ALMEIDA/EPA-EFE/Shutterstock (10587343d) Portugal's Prime Minister Antonio Costa during the press conference after an urgent meeting of the Council of Ministers, at the Ajuda Palace in Lisbon, Portugal, 18 March 2020. The number of Covid-19 infected people in Portugal are 642 of which 89 are hospitalized. Coronavirus in Portugal, Lisbon - 18 Mar 2020

கொரோனா தொற்று உலக நாடுகளை உலுக்கி வரும் சூழலில் ஒவ்வொரு தேசமும் அதனை எதிர்கொள்ள புதிய புதிய வழிமுறைகளை கண்டறிந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றும் அதிகரித்து வரும் வேளையில் தங்களது மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது ஒவ்வொரு நாட்டிற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது.

போர்த்துக்கலில் ஏறக்குறைய 16,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போர்த்துக்கல் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கு அங்கே மருத்துவம் இலவசம், இருப்பினும் மார்ச் 18 ஆம் தேதி அந்நாட்டில் ஊரடங்கை போர்துகல் அரசு அறிவிக்கும் போது அவர்களின் ஒரு அறிவிப்பை வாசிக்கையில் என் கண்களில் நீர் கோர்த்தது. கொஞ்சம் நேரம் அழுகவும் செய்தேன்.

மார்ச் 18 தேதியில் போர்துகலின் அறிவிப்பு இது தான் “All migrants in Portugal will be treated as permanent residents until 1st July to ensure they have access to public services during the corona virus outbreak, People should not be deprived of their rights to health and public service just because their application has not yet been processed. In these exceptional times, the rights of migrants must be guaranteed.”

அதாவது மார்ச் 18 ஆம் தேதியின் படி போர்த்துக்கலில் புலம் பெய்ர்ந்து குடியிரிமைக்காக விண்ணப்பித்திருந்த அனைவரையுமே தங்கள் நாட்டின் குடிமக்களாக அறிவித்தது. சர்வதேச போக்குவரத்து நிறுத்தப்பட்ட சூழலில். அன்றைய தேதியில் போர்த்துக்கலில் வசிக்கும் அனைத்து மனிதர்களுக்கும் கொரோனா சிகிச்சை போய் சேர வேண்டும், ஒருவர் போர்த்துக்கல் குடிமகனாக இல்லாத காரணத்தால் அவருக்கு மருத்துவம் மறுக்கப்பட கூடாது என்றது அந்த அறிக்கை. மனித சமூகம் சந்தித்து வரும் பெரும் நெருக்கடியான காலகட்டத்தில் கூட மனித மனம் எவ்வாறு முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதற்கு போர்த்துக்கல் ஒரு முன்னுதாரமாக திகழ்கிறது.

ஒரு நாடு அதன் குடிமக்களை நேசிக்க வேண்டும், அவர்களின் நலனில் அக்கறைகொள்ள வேண்டும், ஆட்சியாளர்கள் தங்கள் மக்கள் துயருறும் போது கண்ணீர் சிந்திக் கொண்டே காரியங்கள் செய்ய வேண்டும்.BRAVO #Portugal

போர்த்துக்கல் தேசத்திற்கு சல்யூட்…..

முத்து கிருஷ்ணன்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.