இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதே சமூக நீதியைக் கொண்டு வரத்தான்.
2 ஆயிரம் ஆண்டுகளாக கல்வி உட்பட எதுவும் கொடுக்கப்படாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இப்போது உள்ள சமூகம் சலுகைகள் கொடுத்து அவர்கள் எல்லோரையும் போல் சமமாக மதிக்கப்படுவதை உறுதி செய்யவே இட ஒதுக்கீடு கொண்டுவரப் பட்டது அம்பேத்கர் அவர்களால்.
இன்று பல நயவஞ்சகங்கள் புரிந்து அந்த சமூக சமத்துவத்தை ஒடுக்கப்பட்டவர்களுக்கு தராமல் ஏமாற்றிவரும் பார்ப்பனீயம் அது வெறும் பொருளாதார ஏற்றத்தாழ்வு சம்பந்தப்பட்டது என்று 10 சதவீதம் ஒதுக்கீட்டை மேல்சாதியினருக்கு ஒதுக்கியிருப்பது இட ஒதுக்கீடு முறையை செல்லரித்து இல்லாமல் செய்யவே.
இதை எதிர்த்து பெரிய கட்சிகள் பலவும் பேசவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இட ஒதுக்கீடு வரலாற்றை அம்பேத்கரில் ஆரம்பித்து விளக்குகிறார் பேரா ரஞ்சன் அவர்கள்.
யூ ட்யூப் வீடியோ கீழே..