மக்கள் சிந்திய கண்ணீரும், ரத்தமும், கோபக்கனலாக மாறும் போது, “உங்கள் கிரீடங்கள் மண்ணில் உருளும்”.
_“நடந்து செல்லும் தொழிலாளர்களின் துயரங்களைக்கண்டு கண்ணீர் விடுபவர்கள் அவர்களுடைய சூட்கேஸ்களை சுமந்து . அவர்களுடன் நடந்து செல்லலாமே ?” – நிர்மலா சீதாராமன்.…
புலம்பெயர்ந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 22 கோடி என்கிறது இன்டியன் எக்ஸ்பிரஸ்.
14 கோடிக்கும் அதிகம் என்கிறது லண்டனின் பைனான்ஷியல் டைம்ஸ்.
உலகின் மிகப்பெரிய புலம்பெயர்வு என அனைத்து உலக ஊடகங்களும் சொல்கின்றன.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது கூட இவ்வளவு புலம்பெயர்வு இல்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
99% விழுக்காடு தொழிலாளர்கள் இந்தி பேசும் மாநிலங்களான 1) உ.பி, 2) பீகார், 3) ஒரிசா, 4) மகாராஷ்டிரா, 5) ஜார்கண்ட், 6) மத்திய பிரதேசம் மற்றும் 7) ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்.
இங்கு நமக்கு இரண்டு கேள்விகள் இந்தி படித்தால் தான் முன்னேற முடியும் என இங்கிருக்கும் சங்பரிவார கும்பல் ஓயாமல் கத்திக்கொண்டிருக்கின்றன.
1) இத்தனை கோடி தொழிலாளர்கள் ஏன் இந்தியை பேசும் மொழியாக கொண்ட மாநிலங்களிலிருந்து வெளியேறி தென்னிந்தியாவை நோக்கி வந்தனர் ?
2) மேற்கண்ட மாநிலங்களுக்கு இப்போதும் மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு அங்கு இந்தியா சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் வாரியிறைக்கப்பட்ட லட்சக்கணக்கான கோடிகள் என்னவாயிற்று.?
அவர்களுக்கான கல்வி, மருத்துவம், தொழில் போன்றவற்றை செய்யாமல் அவர்களை “பஞ்சப்பராரிகளாக” இப்போது நடக்க விட்ட அவலம் எதனால் வந்தது ?
கழகங்களால் தமிழ்நாடு கெட்டுவிட்டது என்று சொல்லும் இவர்கள் தான் தமிழகம் முன்னேறிய மாநிலம். எனவே நிதியை மத்திய அரசு குறைக்கிறது என்றும் பேசுபவர்கள்.
தென்னிந்தியா இல்லையென்றால் இந்தியாவின் பொருளாதாரம் ஆட்டம் காணும்.
தமிழகம் மட்டும் தரும் வருவாய் என்பது பாகிஸ்தான் ஒரு ஆண்டுக்கு போடும் பட்ஜெட்டிற்கு ஒப்பானது.
கண்முன் எவ்வளவு துயரக்கதைகளை தினந்தோறும் பார்க்கிறோம். ஆனால் நிர்மலா சீதாராமனின் அருவருப்பான உடல் மொழியும் ஆணவப்பேச்சும் எப்படி இருக்கிறது பாருங்கள்.
மக்களிடம் கையேந்தி ஓட்டு வாங்கிவர்களே மனசாட்சி இல்லாமல் இருக்கும்போது..அடுத்தவர் முதுகில் சவாரி செய்பவர்தானே இவர் !
70 ஆண்டுகளாக அந்த மாநிலங்களுக்கு செலவிடப்பட்ட தொகை என்னவாயிற்று ? அவர்கள் ஏன் தங்களுடைய சொந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்தார்கள் ? இனி அவர்கள் மீண்டும் வருவார்களா ? என்ற கேள்விகள் மிக முக்கியமானவை.
உங்களுடைய “ஒரே நாடு, ஒரே கார்டு” எவ்வளவு பொய்யானது என்பதை யாரும் பிரச்சாரம் செய்யாமலே “கொரோனா வெளிச்சம் போட்டு காட்டி விட்டது”. அவர்கள் இனி ஒரு போதும் நம்ப மாட்டார்கள் !
அவர்கள் சிந்திய கண்ணீரும்,ரத்தமும் உங்களை ஒரு நாள் கேள்வி கேட்கும். அவர்களுடைய நடைபயணங்கள் நெடும்பயணங்களாக மாறினால் உங்கள் கிரீடங்கள் மண்ணில் உருளும்.
அதுவரை ஆடிக்கொள்ளுங்கள் !
கூடவே இன்னொன்றையும் சேர்த்தே யோசிப்போம்…
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நாகர்கோவிலில் சமூக ஆர்வலர் ஒருவர், முகநூலில்
கன்னியாகுமரியில், தான் அன்று கண்ட விசித்திரக் காட்சியைப் பற்றி வியந்து விவரித்து கொஞ்சம் பயத்தோடு ஒரு பதிவினைப் போட்டிருந்தார்.
அதாவது முன் எப்போதும் இல்லாததைக் காட்டிலும் இப்பொது கன்னியாகுமரி நகரத்தில் வட இந்தியர்கள், கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக குடியேறி இருப்பதையும், அங்கே வசிக்கும் உள்ளூர் பாஜகவினர் அவர்களுக்கான ரேஷன் கார்டிலிருந்து வோட்டர் ஐடி, ஆதார் கார்டு என ஏஜென்டாக இருந்து வாங்கித்தரும் வேலையை ஒரு தொழில் போலவே செய்கிறார்கள்…
அவர்களை வாக்காளர் பட்டியலிலும் இணைக்க, நுழைக்க, திணிக்க பகீரதப் பிரயத்தனம் செய்து, ஓபிஎஸ் அதிமுகவின் துணையுடன் அதை செய்து முடித்தும் விட்டார்கள் என்று எழுதியிருந்தார்.
மேலோட்டமாக பார்க்கும் போது அது நமக்கு அப்போது பெரிய விஷயமாக தெரியாமல் இருந்தாலும்…
கன்னியாகுமரியில் மட்டுமல்ல சென்னையில் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் ஹிந்தி பேசும் வட மாநிலத்தவர் மிக அதிகமாக வருவதும்…
விருந்தாளி போல வந்து மெல்ல மெல்ல முதலாளிகளாக மாற நினைப்பதும், மாறியதும் அப்போது நம் அறிவுக்கு எட்டாத சங்கதியாக அது இருந்தது…
பாஜகவின் ஒரே நாடு ஒரே ரேஷன் என்று ஓங்கிக் குரல் எழுப்பிய போது தான் நமக்கு கொஞ்சம் சந்தேகம் வர ஆரம்பித்தது…
இவர்கள் எல்லோருமே தாமரைக்கு ஓட்டுப் போடுவதற்காக தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட *human EVMs என்பது
மெல்ல புரிய ஆரம்பித்தது.
பாஜகவினர் மிக நுட்பமாக திட்டமிட்டு, பாஜாக ஆளாத மாநிலங்களில் குடியேறச் செய்த…
2 கோடி பாஜக ஆதரவு வாக்காளர்கள், பாஜகவினரால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை உதறித்தள்ளி விட்டு…
அவரவர் சொந்தமாநிலத்துக்கு திரும்பிச்செல்வதை, ஆளும் பாஜக அரசால் ஜீரணிக்க முடியவில்லை!!!
இந்த பெரும் கள்ள வோட்டு தந்திரத்திற்கு பாஜக வினர் செலவு செய்த பணமும், பேருழைப்பும் கொரோனா நோயால் நிர்மூலமாகி…
பாஜகவினர் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த, சில மாநிலங்களின் அரசை கைப்பற்றும் தந்திரமான திட்டம்.
காவி தொழிலாளர்களின் சொந்த ஊர் செல்வதை தடுக்கும் முயற்சியில் பெரும் தோல்வி கண்டதை சகித்துக் கொள்ள முடியாத பாஜகவின் மேல்மட்டக்குழு,
எப்படியாவது இதை தடுத்து விட பெருமுனைப்பாக, அந்த தொழிலாளர்கள் செத்தாலும் பரவாயில்லை; ஆனால் போக்குவரத்து வசதிசெய்து கொடுத்து அவர்களது கள்ள ஓட்டுக்களை இழக்க மாட்டோம் என அடம் பிடிக்கிறது.
இந்த கள்ளவோட்டு இழப்பின் மீதான கோபம் தான் நிர்மலா சீத்தாராமன், இழிநிலை கரு. நாகராஜன் போன்றோரின் பேச்சுக்களாக, பேட்டிகளாக, டிவிட்களாக வயித்தெரிச்சல் வெளிவருகிறது!
எதை நம்பி எல்லா விவாதத்திலும், எல்லா சங்கிகளும் விரைப்பாகவும், முறைப்பாகவும் தாமரை மலர்ந்தே தீரும் என்று ஈமு கோழிகள் போல கத்திக் கொண்டிருந்தார்களோ…
அந்த நம்பிக்கையை குழி தோண்டிப் புதைக்கும் வண்ணம் கொரோனாவும், இந்த முட்டாள் ஜனங்களும்
நடந்து கொள்வதால் தங்கள் கொள்ளையடிக்கும் எதிர்கால திட்டங்களுக்கு இந்த மக்கள் எள்ளும் தண்ணியும் தெளித்து மங்களம் பாடிவிட்டார்களே என்ற வயிற்றெரிச்சில்.
ஆக, பாஜகவுக்காக தமிழகத்திற்கு இடப்பெயர்ச்சி செய்த இரண்டு கோடி மக்கள் தான் இப்போது நடு ரோட்டில் நடக்கிறார்கள். இப்படி நாடெங்கும் நடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள் தங்கள் மாநிலங்களை நோக்கி.
*செக்கு எது சிவலிங்கம் எது என்று தலை, கால் தெரியாமல், கால் தூக்கி கசையடி வாங்கிக் கட்டிக்கொள்ளப்போகிறார்கள், அதீத தலைக்கனம் கொழுத்த பாஜக வினர்.
— வாட்ஸப்பில் இரவி தமிழன்.